கேப்டன் பதவிக்கு தோனி தகுதி இல்லாதவர்; முன்னாள் வீரரின் தந்தை சர்ச்சை கருத்து
இந்திய அணியின் வெற்றி கேப்டன் தோனியை கடுமையாக விமர்சிப்பவர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங். தன் மகன் கிரிக்கெட் வாழ்க்கையை கெடுத்தவர் தோனிதான் என்ற ரீதியில் அவர் பேச, யுவராஜ் சிங் அதற்காக வருத்தம் தெரிவிக்க, பிறகு தந்தையுடன் பேச்சு வார்த்தைகளையே துண்டித்துக் கொண்டார் யுவராஜ் சிங்.
இந்நிலையில் என்.என்.ஐ.எஸ். ஸ்போர்ட்ஸ் யோக்ராஜ் சிங் கூறியதாக வெளியிட்டுள்ள செய்தியில் “யுவராஜ் சிங் தான் கேப்டனாக உரிமை பெற்றவர், ஆனால் அணிக்கு அவரை விட மிகவும் தாமதமாக வந்த ஒருவருக்கு (தோனி) கேப்டன்சி கொடுக்கப்பட்டது.
இந்தியாவுக்காக ஆடும் அனைத்து கிரிக்கெட் வீரர்களும் என் மகன் யுவி போன்றுதான் எனக்கு, வாழ்க்கையின் எந்த ஒரு துறையிலும் நல்லவர்களும் இருக்கிறார்கள் கெட்டவர்களும் இருக்கிறார்கள்.
ராயுடு, என் மகனே நீ அவசரப்பட்டு ஓய்வு முடிவை எடுத்திருக்கிறாய். ஓய்விலிருந்து வெளியே வந்து உன்னால் என்ன முடியும் என்பதை நிரூபித்து காட்டு. தோனி போன்றவர்கள் எப்போதுமே ஆடிக்கொண்டிருக்க முடியாது” என்று கூறியதாக அந்தச் செய்தியில் யோக்ராஜ் சிங் மேற்கோள் காட்டப்பட்டுள்ளார்.