டி10 லீக் கிரிக்கெட் போட்டியில், மராத்தா அராபியன்ஸ் அணிக்காக யுவராஜ் சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், தனது ஓய்வுக்குப் பிறகு, வெளிநாடுகளில் நடக்கும் டி20 போட்டிகளில் பங்கேற்க, இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் அனுமதி கேட்டிருந்தார். அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து வெளிநாடுகளில் விளையாடி வருகிறார். சமீபத்தில் கனடாவில் நடந்த குளோபல் டி20 தொடரில் பங்கேற்றார்.
இப்போது, அபுதாபி டி-10 லீக் கிரிக்கெட் போட்டியில் ஒப்பந்தமாகி இருக்கிறார். ஐக்கிய அரபு அமீரகத்தில் நவம்பர் 15 ஆம் தேதி தொடங்கும் இந்த தொடரில், 8 அணிகள் பங்கேற்கின்றன. இதில் ஒன்றான மராத்தா அரேபியன்ஸ் அணிக்காக அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் வெய்ன் பிராவோ தலைமையிலான இந்த அணியில் இலங்கை வீரர் மலிங்காவும் உள்ளார்.
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் யுவராஜ் சிங். இவர் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்றார்.
என்றாலும் வெளிநாடுகளில் நடைபெறும் கிரிக்கெட் லீக்கில் விளையாடுவேன் என்று தெரிவித்தார். இதற்கு பிசிசிஐ-யும் அனுமதி அளித்தது. இதனையடுத்து அவர் கனடாவில் நடைபெற்ற டி20 லீக்கில் விளையாடினார்.
அடுத்த மாதம் 15-ந்தேதியில் இருந்து 24-ந்தேதி வரை அபு தாபியில் T10 கிரிக்கெட் லீக் நடைபெறுகிறது. இதில் விளையாடும் மராதா அரேபியன்ஸ் அணி யுவராஜ் சிங்கை ஒப்பந்தம் செய்துள்ளது. அவர் இந்தத் தொடரின் இந்தியாவின் ஐகான் வீரர் ஆவார்.
மராதா அரேபியன்ஸ் அணியின் கேப்டனாக வெயின் பிராவோ உள்ளார். தலைமை பயிற்சியாளராக ஆண்டி பிளவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். லசித் மலிங்கா, கிறிஸ் லின் ஆகியோரும் இந்த அணியில் இடம் பிடித்து்ளளனர்.