“ஒரு போட்டோ போட்டதுக்கா இப்படி வச்சு செய்வாங்க!” சஹாலை பங்கமாக கலாய்த்த யுவி!
யுசுவேந்திர சஹாலை ட்விட்டரில் செம்மையாக கலாய்த்துள்ளார் முன்னாள் இந்திய நட்சத்திரம் யுவராஜ் சிங்.
ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. பிளே ஆப் போட்டிகளும் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டன. முதல் எலிமினேட்டர் போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிராக ஆடிய பெங்களூரு அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி துரதிர்ஷ்டவசமாக இந்த வருடமும் கோப்பையை நெருங்க முடியாமல் வெளியேறியது. இதனால் ரசிகர்களும் பல முன்னாள் வீரர்களும் பெங்களூரு அணி மீது கடும் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.
வீரர்களை தனிப்பட்ட முறையிலும் ஒட்டுமொத்த அணியாகவும் விமர்சனத்தை முன்வைக்கும் இந்த தருணத்தில் பெங்களூரு வீரர்களில் சிலரை ட்விட்டர் பக்கத்தில் விடாமல் துரத்திச் சென்று கலாய்த்து வருகிறார் இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்.
ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிய பிறகு பெங்களூரு அணியின் நட்சத்திர வீரரான யூசுவேந்திர சஹால், கடற்கரைக்குச் சென்று புகைப்படம் ஒன்றை எடுத்து அதனை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அதற்கு “அழகான சூரியன் மறையும் காட்சி, என்னுடைய புதிய கேமரா மூலம் புகைப்படம் எடுத்துள்ளேன்.” என குறிப்பிட்டு இருக்கிறார்.
இதற்கு கமென்ட் செய்த யுவராஜ், “இறுதிப் போட்டியை இந்த புதிய கேமராவில் காணப் போகிறாயா? அல்லது நேரடியாக மைதானத்திற்கு சென்று காண்பாயா? என கேள்வி எழுப்பி ரசிகர்கள் மத்தியில் கலகலப்பை உண்டாக்கினார்.
பெங்களூரு அணி இறுதிப் போட்டி வரை இம்முறையும் செல்லவில்லை என்பதை இவர் மறைமுகமாக சுட்டிக்காட்டி இருப்பதை அனைவரும் அறிவர் இதற்கு சஹால் எந்தவித பதிலும் அளிக்கவில்லை.
தற்போது நடைபெற்று வரும் இரண்டாவது எலிமினேட்டர் போட்டியில் டெல்லி மற்றும் ஹைதரபாத் இரு அணிகளும் பலபரிச்சை மேற்கொண்டு வருகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. பந்துவீச்சில் ஹைட்ரபாத் சற்று தடுமாற்றமே கண்டு வருகிறது. ஏனெனில் டெல்லி அணி பேட்டிங்கில் ஒரு ஓவருக்கு 10 ரன்கள் வீதம் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி அசத்தி வருகிறது.