ஷர்துல் தாகூர் வேண்டாம்… இவரை மட்டும் டீம்ல எடுக்காம விட்றாதீங்கடா; ஆஸ்திரேலியாவை வீழ்த்த இந்த மூன்று பேரும் தேவை; ஜாஹிர் கான் சொல்கிறார்
முன்னாள் இந்திய வீரரான ஜாஹிர் கான், ஆஸ்திரேலிய அணியுடனான போட்டிக்கான அவரது இந்திய அணியின் ஆடும் லெவனையும் தேர்வு செய்து அறிவித்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 5வது போட்டியில் இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் மோத உள்ளன.
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இரு அணிகளுக்குமே இந்த போட்டி முதல் போட்டி என்பதால், இந்த போட்டியில் வெற்றி பெற்று வெற்றியுடன் தொடரை துவங்க போவது யார் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.
முன்னாள் வீரர்கள் பலரும் இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான போட்டி குறித்தான தங்களது கருத்துக்களையும், கணிப்புகளையும் வெளிப்படுத்தி வரும் நிலையில், முன்னாள் இந்திய வீரரான ஜாஹிர் கான், ஆஸ்திரேலிய அணியுடனான போட்டிக்கான அவரது இந்திய அணியின் ஆடும் லெவனையும் தேர்வு செய்து அறிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணி சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள தடுமாறும் என்பதால், ரவிச்சந்திர அஸ்வின், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா ஆகிய மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுக்குமே இடம் கொடுக்க வேண்டும் என ஜாஹிர் கான் தெரிவித்துள்ளார்.
அதே போல் வேகப்பந்து வீச்சாளர்களாக பும்ராஹ் மற்றும் முகமது சிராஜ் ஆகியோரை தேர்வு செய்துள்ளார். ஐந்து முழு நேர பந்துவீச்சாளர்கள் ஆஸ்திரேலிய அணியுடனான போட்டிக்கு நிச்சயம் தேவை என்றும் ஜாஹிர் கான் தெரிவித்துள்ளார். அதே போல் ஷர்துல் தாகூரை விட ரவிச்சந்திர அஸ்வினுக்கு இடம் கொடுப்பதே சரியானதாக இருக்கும் என்றும் ஜாஹிர் கான் தெரிவித்துள்ளார்.
பேட்ஸ்மேன்களாக சுப்மன் கில், ரோஹித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் கே.எல் ராகுல் ஆகியோரை ஜாஹிர் கான் தனது ஆடும் லெவனில் தேர்வு செய்து அறிவித்துள்ளார்.