அடுத்த வருடம் ஒரு நாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடரில் இந்திய அணி கலந்துகொள்ளவுள்ளது கடந்த 2011ஆம் ஆண்டு கோப்பையை வென்றது உடன் அதன் பின்னர் ஒரு கோப்பையை தவறவிட்டது இந்த முறை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளதால் இந்தியாவிற்கு வாய்ப்புகள் அதிகம் ஏனெனில் 2013ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை தொடரை இந்திய அணி வென்றது இதனால் இந்தியாவுக்கு வாய்ப்பு அதிகம் ஆனால் பிரச்சனை என்னவென்றால் இந்திய அணிக்குள் மட்டுமே ஏனெனில் இந்திய அணியின் இளம் திறமை வாய்ந்த வீரர்கள் உள்ளனர் யாரை தேர்ந்தெடுப்பது யாரையும் கைவிடுவதில்லை என பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாட்களுக்குள் வித்தியாசம் வித்தியாசமாக வீரர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறியவர் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனியின் மீதும் ஒரு கண் உள்ளது
ஆசியக் கோப்பை 2018-ன் சூப்பர் 4 போட்டியில் ஆப்கான் அணிக்கு எதிராக இந்திய அணியின் கேப்டனாக மீண்டும் மகேந்திர சிங் ‘தல’ தோனி களமிறங்கியது, இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் நீண்ட நாளைய ஏக்கத்தைப் பூர்த்தி செய்வதாக அமைந்ததோடு அந்தப் போட்டி ‘டை’ ஆனதும் பரபரப்பானது.
696 நாட்களுக்குப் பிறகு தோனி மீண்டும் கேப்டன் ஆகி ஒரு போட்டியை இளம் வீரர்களைக் கொண்டு வழிநடத்தினார், அனைத்திலும் வெற்றி கண்ட கேப்டன் தோனி தன் 200வது கேப்டன்சி போட்டியில் டை கண்டது கொஞ்சம் துரதிர்ஷ்டமே. ஆனால் தோற்காதது அதிர்ஷ்டமே.
தோனியின் 200-வது ஒருநாள் போட்டி, இது அவரது ஒருநாள் கேப்டன்சியில் கடைசி போட்டி என்று கூறப்படுகிறது அப்படிப்பார்க்கும் போது 2007-ல் இந்திய அணி ராகுல் திராவிட் தலைமையில் உலகக்கோப்பையில் முதல் சுற்றிலேயே வெளியேறி இந்திய அணி கடும் சரிவிலிருந்த காலக்கட்டம், அப்போது இளம் தலைமுறை வீரர்களையும், வேறொரு மாற்றுக் கிரிக்கெட் கலாச்சாரத்தின் முன்னோடியாகவும் தோனியிடம் கேப்டன்சி வழங்கப்பட்டது.