உலகக்கோப்பை தொடருக்கு தோனி மிகவும் முக்கியம்: ஜாகிர் கான்!!

உலக கோப்பை தொடருக்கு தோனி மிக முக்கியமான வீரர் எனவும் அவர் இல்லையென்றால் கடினம்தான் எனவும் இந்தியாவின் முன்னாள் வீரர்கள் ஜாகிர் கான் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது..

அவர் அணியில் இருப்பது இந்தியாவிற்குத்தான் சாதகம் உலக கோப்பை தொடரில் அழுத்தம் மிக அதிகமாக இருக்கும். அவரைப் போன்ற ஒருவர் பின்னால் நின்று சரியாக கமென்ட் கொடுத்தால் இந்திய அணி வெல்ல வாய்ப்புகள் அதிகம் என்று கூறியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி அரிதாக காயம் அடைந்து, இன்றைய 3-வது ஒருநாள் போட்டியை தவறவிட்டுள்ளார்.

கிரிக்கெட் விளையாடும் இன்றைய தலைமுறை வீரர்களில் 37 வயதானாலும் இன்னும் சிறந்த உடற்தகுதியுடன் இருந்து வருபவர் எம்.எஸ்.தோனி.

கடந்த 2004-ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமானதில் இருந்து இதுவரை காயம் காரணமாக தோனி போட்டியில் பங்கேற்காமல் இருந்தது மிகவும் அரிதான நிகழ்வாகும். இதுவரை 2 முறை மட்டுமே காயத்தால் தோனி போட்டியில் விளையாடாமல் இருந்துள்ளார். இன்றைய போட்டியோடு சேர்க்கும்போது, இது 3-வது முறையாகும்.

உடலை கட்டுக்கோப்பாகவும், இளம் வீரர்களுக்கு இணையாகவும் ஆரோக்கியமாகவும் தோனி வைத்துள்ளார். முதல் முறையாக கடந்த 2007-ம் ஆண்டு பெல்பாஸ்டில் தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து அணிகளுக்கு எதிரான இரு ஒரு நாள் போட்டிகளில் வைரஸ் காய்ச்சல் காரணமாக தோனி போட்டியில் பங்கேற்காமல் இருந்தார்.


அதன்பின் 6 ஆண்டுகள் வரை எந்தவிதமான உடல்தகுதிச் சிக்கலும் இல்லாமல் இருந்த நிலையில், 2013-ம் ஆண்டு மேற்கிந்தியத்தீவுகளில் நடந்த முத்தரப்பு தொடரில் தசைப்பிடிப்பு காரணமாக 3 ஒருநாள் போட்டிகளில் தோனி பங்கேற்காமல் இருந்தார்.

அதன்பின் ஏறக்குறைய 6 ஆண்டுகளாக எந்தவிதமான ஒருநாள் போட்டியிலும் காயம் காரணமாக தோனி ஓய்வில் இருந்தது இல்லை. ஆனால், 6 ஆண்டுகளுக்குப் பின் தற்போது, தசைப்படிப்பு காரணமாக, இன்றைய போட்டியில் தோனி பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. யானைக்கும் அடி சறுக்கும் தானே.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டி இன்று நடைபெற்றது. முதல் இரண்டு போட்டிகளில் ஏற்கனவே வெற்றிபெற்றிருந்த இந்திய அணி மூன்றாவது போட்டியை வென்று தொடரை கைப்பற்றியது.

முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 243 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 43 ஓவர்களில் 245 ரன்கள் விளாசி வெற்றியை பெற்றது. இதன் மூலம் 2009க்கு பிறகு நியூசிலாந்து மண்ணில் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது. இந்திய அணி இந்தியாவின் சார்பில் ரோகித் சர்மா 62 ரன்களும், விராட் கோலி 60 ரன்களும், அம்பத்தி ராயுடு 40 ,ரன்களும் தினேஷ் கார்த்திக் 38 ரன்களும் விளாசினர்.

Sathish Kumar:

This website uses cookies.