கோஹ்லி கோவத்தை குறைத்து கொள்ள தேவை இல்லை; ஜாஹிர் கான் சொல்கிறார் !!

கோஹ்லி கோவத்தை குறைத்து கொள்ள தேவை இல்லை; ஜாஹிர் கான் சொல்கிறார்

விராட் கோஹ்லி தனது ஆக்ரோஷத்தையும், கோவத்தையும் குறைத்து கொள்ள தேவை இல்லை என முன்னாள் வீரர் ஜாஹிர் கான் தெரிவித்துள்ளார்.

இந்தியா – ஆஸ்திரேலியா இடையே அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், பெர்த்தில் நடந்த இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என சமன் செய்தது.

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் இரண்டாவது இன்னிங்ஸின் போது இரண்டு அணிகளின் கேப்டன்களுக்கு இடையே முட்டிக்கொண்டது. கோலியும் பெய்னும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், போட்டி முடிந்ததும் இருவரும் கை கொடுத்து கொள்ளும்போது ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் கோலியை பார்த்து கை கொடுத்து அவருக்கு தட்டி கொடுக்கிறார். ஆனால் கோலியோ முறைப்புடனும் விரைப்பாகவும் கை கொடுத்தார். கோலியின் இந்த நடவடிக்கையும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

களத்தில் என்னதான் மோதல் இருந்தாலும், போட்டி முடிந்ததும் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்புடன் கை குலுக்கி கொள்வது வழக்கம். ஆனால் கோலி டிம் பெய்னை முறைத்துக்கொண்டே கை குலுக்கிறார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

கோலியின் இந்த செயலை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன், கோலியை கடுமையாக விமர்சித்துள்ளார். கோலியின் இந்த செயல் மரியாதை இல்லாத கீழ்த்தரமான செயல் என கடுமையாக விமர்சித்திருந்தார்.

அதே வேளையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஜாஹிர் கான், விராட் கோஹ்லி தனது ஆக்ரோஷத்தை குறைத்து கொள்ள தேவை இல்லை, அவர் தவறாக எதுவும் செய்யவில்லை. களத்தில் அது போன்று நடந்து கொள்வது இயல்பு தான்” என்று தெரிவித்துள்ளார்-

Mohamed:

This website uses cookies.