சற்று முன்: யாரும் எதிர்பார்க்காத ஓய்வை அறிவித்த நட்சத்திர வீரர்! திடீர் ஓய்வால் ரசிகர்கள் கவலை!!

”வேறு வழியின்றி நான் ஓய்வினை அறிவிக்கிறேன் என உருக்கமாக தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்”

சர்வதேச போட்டிகளில் பங்கேற்க, ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் வாரியம் இடைக்கால தடைவிதித்துள்ளது

ஒரு காலத்தில் பலம் வாய்ந்த அணியாக இருந்த ஜிம்பாப்வே அணி, கடந்த சில வருடங்களாக மோசமான நிலைக்கு தள்ளப் பட்டுள்ளது. இதற்கு அரசியல் தலையீடு காரணம் என்று கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தைக் கலைத்த அந்நாட்டு அரசு, கிரிக்கெட் தொடர்களை நிர்வகிக்க, இடைக்கால கமிட்டியைத் தேர்வு செய்திருந்தது.

இதுபற்றி லண்டனில் நடந்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கிரிக்கெட் வாரியத்தில் அரசியல் தலையீடு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதால், அந்த நாட்டு கிரிக்கெட் அணிக்கு இடைக்கால தடை விதிக்க ஐசிசி முடிவு செய்தது.

இந்த தடையால், அந்நாட்டுக்கு ஐசிசியால் வழங்கப்பட்டு வந்த நிதி, நிறுத்தி வைக்கப்படும். மேலும் ஐசிசி நடத்தும் எந்தவித மான போட்டியிலும் ஜிம்பாப்வே அணியால் கலந்து கொள்ள முடியாது.

’ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தில் நடப்பது எந்த வகையிலும் ஐசிசியால் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது. ஐசிசி விதிமுறைகளை மீறிய செயல்கள் அங்கு நடக்கின்றன. அதனால் இந்த இடைக்கால தடை முடிவு எடுக்கப்பட்டுள்ளது’’ என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் ஷஷாங் மனோகர் தெரிவித்துள்ளார்.

And in the wake of the huge setback, Solomon Mire decided to hang his boots with immediate effect. The allrounder took to Instagram to confirm the news. Expressing his disappointment over the decision, Solomon Mire wrote:

இந்நிலையில் வேறு வழியின்றி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார் ஜிம்பாப்வே அணியின் அதிரடி பேட்ஸ்மேன் சாலமன் மைர். ஜிம்பாவே கிரிக்கெட்டிற்காக கடந்த பல ஆண்டுகளாக உழைத்தவர். தற்போது இதயம் சுருங்கும் வகையில் அந்த அணி தடை செய்யப்பட்டுள்ளதால் வேறு வழியின்றி நான் ஓய்வினை அறிவிக்கிறேன் என உருக்கமாக தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மொத்தம் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் 47 ஒருநாள் போட்டியில் மற்றும் 9 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார் இவர் அதில் 1000 ரன்களும் 14 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்

 

 

Sathish Kumar:

This website uses cookies.