ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 42 பந்தில் 71 ரன்கள் விளாசி அணியை வெற்றி பெற வைத்த மகிழ்ச்சியோடு விடைபெற்றார் ஜிம்பாப்வே கேப்டன்.
வங்காளதேசத்தில் வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையில் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
இந்தத் தொடரோடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஜிம்பாப்வே அணி கேப்டன் மசகட்சா தெரிவித்திருந்தார். ஜிம்பாப்வே இன்று தனது கடைசி லீக்கில் ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது.
வங்காளதேசத்தில் நடந்து வரும் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த 5-வது லீக்கில் ஆப்கானிஸ்தான்-ஜிம்பாப்வே அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 8 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரமனுல்லா குர்பாஸ் (61 ரன்), ஹஸ்ரத்துல்லா ஜசாய் (31 ரன்) நல்ல தொடக்கம் அளித்த போதிலும் பின்வரிசை வீரர்கள் சொதப்பி விட்டனர். வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் போபு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் 156 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே களம் இறங்கியது. மசகட்சா கடைசி போட்டியில் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி வைத்த பெருமையோ வெளியேற வேண்டுமு் என்ற நோக்கத்தில் தொடக்க வீரராக களம் இறங்கினார்.
தொடக்கத்தில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 27 பந்தில் 2 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் அரைசதம் அடித்த மசகட்சா, 42 பந்தில் 4 பவுண்டரி, 5 சிக்சர்களடன் 71 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இவரது அதிரடி ஆட்டத்தால் ஜிம்பாப்வே 19.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஜிம்பாப்வே அணிக்கான தனது கடைசி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிதோடு, அணியை வெற்றி பெற வைத்து மகிழ்ச்சியோடு வெளியேறினார் மசகட்சா.