ஆப்கானிஸ்தானின் ஷ்பாஸீகா கிரிக்கெட் லீக் தொடரில் இருந்து வீரர்களை அழைத்தது ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம்

ஆப்கானிஸ்தானில் உள்ள காபூல் சர்வதேச மைதானத்திற்கு அருகில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 3 பேர் பலியாக 12 பேர் காயமடைந்தனர். இதனால், ஷ்பாஸீகா கிரிக்கெட் லீக் தொடரில் இருந்து தனது ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர்களை திருப்பி அனுப்புமாறு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் கேட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் எங்கள் ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர்களை கூடிய விரைவில் திருப்பி அனுப்புமாறு ஜிம்பாப்வே அணியின் பேச்சாளர் டார்லிங்டன் மஜோங்கா கேட்டு கொண்டுள்ளார்.

“இன்று நடந்த குண்டு வெடிப்பிற்கு பிறகு ஆப்கானிஸ்தானில் உள்ள ஜிம்பாப்வே வீரர்கள் உடனடியாக அடுத்த விமானத்தை பிடித்து ஜிம்பாப்வே வரவேண்டும் என ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது, என மஜோங்கா தெரிவித்தார்.

ஹெமில்டன் மசகட்ஸா, உசி சிபான்டா, சீன் வில்லியம்ஸ், எல்டன் சிகும்புறா மற்றும் சிக்கந்தர் ரசா ஆகிய ஜிம்பாப்வே வீரர்கள் ஆப்கானிஸ்தானில் தான் உள்ளார்கள்.

அந்த மைதானத்திற்கு அருகில் குண்டு வெடிப்பு நடந்ததால், டிபண்டர்ஸ் மற்றும் நைட்ஸ் இடையேயான போட்டி நிறுத்தப்பட்டது. வீரர்களை காப்பாற்றுவது அந்த வாரியத்தின் பொறுப்பு.

வெஸ்ட் இண்டீஸ், தென்னாபிரிக்கா, இலங்கை மற்றும் ஓமான் நாடுகளில் இருந்து பல வீரர்கள் இந்த லீக்கில் விளையாடி கொண்டிருக்க, பாகிஸ்தானில் இருந்து ஒரே வீரர் ஷாஹித் அப்ரிடி விளையாடுகிறார்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.