உலக கோப்பை தகுதி சுற்றில் தோல்வி எதிரொலி: ஜிம்பாப்வே கேப்டன் மற்றும் பயிற்சியாளர்கள் நீக்கம்

சமீபத்தில் சொந்த மண்ணில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்றில் ஜிம்பாப்வே அணி சூப்பர் சிக்ஸ் சுற்றோடு வெளியேறியது. இதன் கடைசி லீக்கில் குட்டி அணியான ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான ஆட்டத்தில் 3 ரன் வித்தியாசத்தில் தோற்றதால் இறுதிப்போட்டி வாய்ப்பை மட்டுமின்றி 2019-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பையும் ஜிம்பாப்வே பறிகொடுத்தது. 1979-ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக ஜிம்பாப்வே அணி உலக கோப்பையில் கால்பதிக்க முடியாத பரிதாபம் ஏற்பட்டு இருக்கிறது.

With 2019 ICC event restricted to 10 teams, only two qualification places were available. In the Super Six match of the Cricket World Cup Qualifiers, Zimbabwe needed a win against UAE to qualify, but lost the match by three runs.

இதனால் கடும் அதிருப்திக்குள்ளான ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம், அந்த அணியின் கேப்டன் கிரேமி கிரிமரை நேற்று அதிரடியாக நீக்கியது. அத்துடன் அணியின் தலைமை பயிற்சியாளர் ஹீத் ஸ்டீரிக், பேட்டிங் பயிற்சியாளர் குளுஸ்னர், பந்து வீச்சு பயிற்சியாளர் டக்லஸ் ஹோண்டா மற்றும் உதவி பயிற்சியாளர்களும் கழற்றிவிடப்பட்டனர். புதிய கேப்டனாக பிரன்டன் டெய்லர் நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது.

ஜிம்பாவே நாட்டில் உலகக்கோப்பைக்கான தகுதி சுற்று போட்டிகள் நடந்து வரும் நிலையில் இந்த போட்டியில் நேற்று மேற்கிந்திய தீவுகள் அணி, ஸ்காட்லாந்து அணியை வென்று தகுதி பெற்றது.

In addition to the national coaching staff – head coach Heath Streak, batting coach Lance Klusener, bowling coach Douglas Hondo, fielding coach Walter Chawaguta, fitness coach Sean Bell and team analyst Stanley Chioza – all other coaching staff, including the Zimbabwe A coach Wayne James and Under-19 coach Stephen Mangongo have been booted out. Convener of selectors Tatenda Taibu has also stripped of his position.

நேற்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை ஸ்காட்லாந்து தேர்வு செய்தது. இதனால் முதலில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, கிறிச்கெயில் விக்கெட்டை முதலிலேயே இழந்தது. இருப்பினும் சாமுவேல்ஸ், லீவிஸ் ஜோடி பொறுப்புடன் விளையாடியது. ஆனால் பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆனதால் அந்த அணி 48.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 198 ரன்கள் மட்டுமே எடுத்தது

இதனால் 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி, 35.2 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 125 ரன்கள் எடுத்திருந்தது. வெற்றி பெற இன்னும் 74 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லீவீஸ் முறைப்படி மேற்கிந்திய தீவுகள் அணி 5 ரன்கள்

இதனால் 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி, 35.2 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 125 ரன்கள் எடுத்திருந்தது. வெற்றி பெற இன்னும் 74 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லீவீஸ் முறைப்படி மேற்கிந்திய தீவுகள் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, உலக கோப்பைக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி தகுதி பெற்றது.

Editor:

This website uses cookies.