ஒலிம்பிக் வீரர் உசேன் செய்ண்ட் போல்ட் நாம் அனைவரும் அறிந்த பிரபலமான தடகள வீரர். ஓட்டப் பந்தைய வீரரான அவர் தற்போது தனது ஓய்வு முடிவைப் பற்றி அறிவித்துள்ளார். இந்த வாரம் முதல் அனைத்து வகையான ஓட்டப் பந்தயத்திளிருந்தும் ஓய்வு பெறப்போகும் அவர் ,இனிவரும் காலங்களில் இந்த உலகின் அதிவேக மன்னன் கலந்து கொள்ளப் போவது இல்லை என்பது அவரது ரசிகர்களுக்கும் ,ஓட்டப்பந்தைய உலகிற்க்கும் நல்ல செய்தி அல்ல .

உசைன் போல்ட்டுக்கு யுவராஜ் சிங் பிரியாவிடை 2

இந்த நேரத்தில் அவரது நண்பரான யுவராஜ் சிங் அவருக்கு தனது பிரியா விடையை அளித்துள்ளார். அவரது இன்ஸ்டக்ராம் பக்கத்தில் அவர் ஒரு வீடியோவினை பதிவு செய்து அவருக்கு தனது எதிர்கால வாழ்க்கை வளமாக அமைய வாழ்த்துக்களை தெரிவித்து பிரியா விடை அளித்தார்.

அந்த இணைப்பு கீழே :

 

 

உலகின் அதி­வேக ஓட்டப் பந்­தய வீர­ராக வலம் வந்த உசைன் போல்ட், ஜமைக்­காவை சேர்ந்த அவர் 100, 200 மீட்டர் ஓட்­டப்ர் ­போட்­டியில் உலக சாத­னை­யா­ள­ராக தற்போதும் இருந்து வருகிறார். இன்று வரை அவரது அந்த சாதனையயை எவராலும் தகற்க்க முடியவில்லை என்பதும் அவருக்கு பெருமை சேர்க்கும் ஒன்றாகும்.

100 மீற்றரை 9.58 விநா­டி­யிலும், 200 மீட்டரை 19.19 விநா­டி­யிலும் கடந்து சாதனை படைத்­துள்ளார். ஒலிம்பிக் போட்­டியில் 8 தங்கப் பதக்கங்களை வென்று இருக்­கிறார்.

உசைன் போல்ட்டுக்கு யுவராஜ் சிங் பிரியாவிடை 3
BEIJING, CHINA – AUGUST 27: Usain Bolt of Jamaica celebrates after winning gold in the Men’s 200 metres final during day six of the 15th IAAF World Athletics Championships Beijing 2015 at Beijing National Stadium on August 27, 2015 in Beijing, China. (Photo by Christian Petersen/Getty Images for IAAF)

கடந்த வாரம் செக்.குடி­ய­ரசில் நடைபெற்ற உலக தட­கள போட்­டியில் பங்­கேற்க சென்­ற அவர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார்.

அதன்போது உசைன் போல்ட் ஊடகங்களுக்கு மேலும் தெரிவிக்கையில்,

நான் சிறந்தவீரன் என்ற பெயரை பெற்­றி­ருக்­கிறேன். எனக்கு என்ன தேவையோ அவை அனைத்­தையும் செய்து விட்டேன். தற்­போது அது முடி­வுக்கு வந்­தி­ருக்­கி­றது என்று நினைக்­கிறேன்.

உசைன் போல்ட்டுக்கு யுவராஜ் சிங் பிரியாவிடை 4

லண்­டனில் நடை­பெ­ற­வுள்ள உலக தட­கள சம்­பியன் போட்­டியில் பங்­கேற்க ஆர்­வ­மாக இருக்­கிறேன். அப்­போட்டி எனக்கு உணர்­வு­பூர்­வ­மாக இருக்கும்.

அடுத்த ஒலிம்பிக் போட்­டியில் 100, 200 மீற்றர் ஓட்­டப்­பந்­த­யத்தில் யார் வெற்றி பெறு­வார்கள் என்­பதை பார்­வை­யா­ள­னாக அமர்ந்து பார்ப்பேன். தற்­போது நிறைய இளம் வீரர்கள் வருகிறார்கள். இதில் யார் பட்டத்தை வெல்வார்கள் என்பதை பார்க்க ஆர்வமாக இருக்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

வீழ்த்த முடியா தங்க மகனாக வலம் வந்த உசேன் போல்ட், ஒலிம்பிக் போட்டியில் மட்டும் 8 தங்க பதங்கங்களை அள்ளி இருக்கிறார்.

உசைன் போல்ட்டுக்கு யுவராஜ் சிங் பிரியாவிடை 5

அவருடைய பதக்க்க பட்டியல் கீழே :

ஒலிம்பிக் போட்டி – 8 தங்கம்

உலக தடகள பட்டம் – 11 தங்கம், 2 வெள்ளி

உலக ரிலே ஓட்டபந்தைய பட்டம் – 1 வெள்ளி

சிஏசி ஓட்டடபப்ந்தைய பட்டம் – 1 தங்கம்

காமன் வெல்த் போட்டிகள் – 1 தங்கம்

உலக ஜூனியர் ஓட்டப்பந்தைய பட்டம் – 1 தங்கம் ,2 வெள்ளி

உலக இளைஞர் ஓட்டபந்தைய பட்டம் – 1 தங்கம்

 

மொத்தம் 23 தங்கம் மற்றும் 5 வெள்ளி என 28 பதக்கங்களை வென்றூள்ளார் இந்த தங்க மகன்.

ஓட்டப் பந்தைய பிரின் கீழ் பார்தால் அவர்,

100 மீட்டர் ஓட்டத்தில் 6 தங்கமும், 200 மீட்டர் ஓட்டத்தில் 10 தங்கம் மற்றும் 1 வெள்ளியும் , 4*400 இணைப்பு ஓட்டத்தில் 7 தங்கம் மற்றும் 1 வெள்ளி என் மொத்தம் 23 பதக்கங்களை அள்ளியுள்ளார் உசேன் போல்ட்.

ஓய்வு பெறப்போகும் அவருடைய எதிர் கால வாழ்வு வளமாகவும்,மகிழ்ச்சியாகவும் அமைய நாம் நம் வாழ்த்துக்களை தெரிவிப்போம்.

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *