20 ஓவர் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்த இந்தியா அதே உத்வேகத்துடன் நாளைய ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.
இந்தியாவின் சிறந்த அணி : ரோகித் சர்மா, சிகர் தவான், விராட் கோலி (கேப்டன்) , ஸ்ரேயஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, எம்.எஸ் தோனி, அக்சர் படேல், யுஜவேந்திர சகால், புவனேஷ்வர் குமார், ஜஸ்ப்ரிட் பும்ரா, முகமது சிராஜ்
வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இரு அணிகள் மோதும் மூன்று ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டியில் டெல்லியில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 53 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
2-வது 20 ஓவர் போட்டி நாளை ராஜ்கோட்டில் நடக்கிறது. இப்போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. வீராட்கோலி தலைமையிலான இந்திய அணி பேட்டிங்கில் வலிமையாக இருக்கிறது.
முதல் ஆட்டத்தில் தொடக்க வீரர்களான ரோகித்சர்மா, ஷிகார் தவான் முதல் விக்கெட்டுக்கு 158 ரன் (16.2 ஓவர்) குவித்து அசத்தினார். கோலி, பாண்ட்யா, டோனி போன்ற அதிரடி வீரர்கள் உள்ளனர்.
பந்துவீச்சில் புவனேஸ்வர்குமார், பும்ரா, சஹால், அக்சர் பட்டேல் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். கடந்த ஆட்டத்தோடு ஓய்வு பெற்ற நெக்ராவுக்கு பதிலாக புதுமுக முகமது சிராஜ் இடம் பெறலாம்.
20 ஓவர் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்த இந்தியா அதே உத்வேகத்துடன் நாளைய ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.
ராஜ்கோட் மைதானத்தில் நாளை நடப்பது 2-வது 20 ஓவர் போட்டியாகும். 2013-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா 202 ரன்னை சேசிங் செய்து வெற்றி பெற்று இருந்தது.
நியூசிலாந்து அணியில் மார்டின் குப்தில், முன்ரோ, வில்லியம்சன், டாம் லாதம், புரூஸ் நிக்கோலஸ் போன்ற அதிரடி வீரர்கள் உள்ளனர். பந்துவீச்சில் சவுத்தி, போல்ட், சான்ட்ரோ, கிரான்ட் ஹோம், சோதி போன்றோர் உள்ளனர்.
நாளைய போட்டியில் தோற்றால் தொடரை இழந்துவிடும். இதனால் நியூசிலாந்து வெற்றிக்காக கடுமையாக போராடும். ஒருநாள் போட்டி தொடரை இழந்துவிட்டதால் 20 ஓவர் போட்டி தொடரையும் இழக்காமல் இருக்க அந்த அணி முயற்சிக்கும்.
Photo by Vipin Pawar / BCCI / SPORTZPICS
இலங்கை வீரர் திலகரத்னே தில்ஷான் டி20 கிரிக்கெட்டில் எடுத்த 1889 ரன்களை கடக்க விராட் கோலிக்கு 12 ரன்களே தேவைப்படுகிறது. பிரெண்டன் மெக்கல்லம் 2140 ரன்கள் எடுத்து முதலிடத்தில் இருக்கிறார்.
யஜுவேந்திர சாஹல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினால் இந்த ஆண்டு டி20 சர்வதேச போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஆப்கன் வீரர் ரஷீத் கான், மே.இ.தீவுகளின் கேஸ்ரிக் வில்லியம்ஸ் ஆகியோருடன் இணைவார்.
ராஜ்கோட் அக்சர் படேலின் சொந்த ஊராகும். இந்தப் பிட்சில் பந்துகள் அதிகம் திரும்பாது, பவுன்ஸும் குறிப்பிடும்படியாக இருக்காது, பந்துகள் வழுக்கிக் கொண்டு செல்லும் என்று அக்சர் படேல் தெரிவித்துள்ளார். ஆட்டம் சனி இரவு 7 மணிக்குத் தொடங்குகிறது.