ஐபில்-இல் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் சிறந்த அணியாக கருத படுகிறார்கள்.டேவிட் வார்னரின் தலைமையில் இந்த முறையும் கோப்பையும் வெல்லும் முனைப்பில் உள்ளது. இந்த ஐபில்-இல் முதல் இரண்டு போட்டிகளில் வென்று, மூன்றாவது போட்டியில் மும்பையிடம் தோற்றுப்போனது. முதல் போட்டியில் யுவராஜ் சிங்க் பெங்களூரிடம் ருத்ரதாண்டவம் ஆட, இரண்டாம் போட்டியில் குஜராத்திடம் வார்னர் மற்றும் ரஷீத் கான் வெற்றி பெற உதவியாய் இருந்தனர்.
ஆப்கானிஸ்தானின் 18 வயது சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் ஐபில்-இல் கலக்கி கொண்டு வருகிறார். இந்த சீசனில் ரஷீத் கான் ஊதா நிற தொப்பியை கைப்பற்ற முனைப்புடன் உள்ளார். பெங்களூரிடம் வார்னர் மற்றும் தவான் பொறுமையாக ஆடினர், ஆனால் நடுநிலை வீரர்கள் நிலைக்காததால், பெங்களூரிடம் தோற்று போனது. இளம் வீரர் ரஷீத் கானும் நல்ல பார்மில் உள்ளார். சன் ரைசர்ஸ் ஐதராபாத்தின் பந்துவீச்சும் பலமாகவே உள்ளது.
நேருக்கு நேர்:
கடந்த ஆண்டு ஐபில்-இல் ஐதராபாத்தை நொறுக்கியது கொல்கத்தா. நடந்த இரண்டு லீக் போட்டிகளிலும் ஐதராபாத்தை வென்றது கொல்கத்தா. முதல் போட்டியில் கம்பிர் 90* அடிக்க, இரண்டாம் போட்டியில் யூசுப் பதான் 34 பந்துகளில் 50 ரன் அடித்து, இரண்டு போட்டிகளில் வெற்றி தேடி தந்துள்ளனர். இதுவரை நேருக்கு நேர் கொல்கத்தா மற்றும் ஐதராபாத் 9 முறை மோதியுள்ளார்கள். கொல்கத்தா 6 போட்டியும் ஐதராபாத் 3 போட்டியும் வெற்றி பெற்றுள்ளது.
இந்த சீசனில்:
சன் ரைசர்ஸ் ஐதராபாத் – வெற்றி, வெற்றி, தோல்வி.
எதிர்பார்க்கும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி:
டேவிட் வார்னர், ஷிகர் தவான், தீபக் ஊடா, யுவராஜ் சிங்க், நமன் ஓஜா, பென் கட்டிங், பிபுல் சர்மா, புவனேஸ்வர் குமார், ரஷீத் கான், ஆஷிஷ் நெஹ்ரா, முஷ்டபிஸுர் ரகுமான்.