ஐதராபாத்தில் நடக்கும் போட்டியில் டாஸை வென்று பந்து வீச தேர்ந்தெடுத்தது கிங்ஸ் XI பஞ்சாப். கடைசி இரண்டு போட்டிகளிலும் பஞ்சாப் தோல்வியை கண்டதால், இந்த போட்டியில் வெற்றி பெற நினைப்பார்கள்.
கிங்ஸ் XI பஞ்சாபில் ஒரே ஒரு மாற்றம் செய்திருக்கிறார்கள். வருண் ஆரோனுக்கு பதிலாக வேக பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மாவை சேர்த்திருக்கிறார்கள்.ஐதராபாத் அணியில் மூன்று மாற்றம் செய்திருக்கிறார்கள். பென் கட்டிங்குக்கு பதிலாக ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபியும், ஆஷிஷ் நெஹ்ராக்கு பதிலாக பரிந்தர் சரணும் மற்றும் பிபுல் ஷர்மாவுக்கு பதிலாக சித்தார்த் கௌலும் உள்ளே வந்துள்ளனர்.
அணிகள் விவரம்:
சன் ரைசர்ஸ் ஐதராபாத்: டேவிட் வார்னர், ஷிகர் தவான், மொய்சஸ் ஹென்ரிக்ஸ், யுவராஜ் சிங்க், தீபக் ஹூடா, முகமது நபி, நமன் ஓஜா, புவனேஸ்வர் குமார், ரஷீத் கான், பரிந்தர் சரண், சித்தார்த் கவுல்.
கிங்ஸ் XI பஞ்சாப்: மனன் வோஹ்ரா, ஹசிம் ஆம்லா, வ்ரிதிமான் சஹா, இயான் மோர்கன், டேவிட் மில்லர், க்ளென் மேக்ஸ்வெல், அக்சர் பட்டேல், மோகித் சர்மா, இஷாந்த் சர்மா, சந்தீப் சர்மா, கே.சி. கருப்பையா.