கபில் தேவை இது போல் யாரும் பெருமை படுத்தியிருக்க மாட்டார்கள்

முன்னாள் இந்திய அணி கேப்டன் கபில் தேவை பெருமை படுத்தும் விதமாக டெல்லியில் உள்ள  பிரபல மெழுகுச்சிலை அருங்காட்சியகமான மேடம் துசாட்ஸ் கபில் தேவ்விற்கு மெழுகு சிலை அமைத்து பெருமை படுத்தியது.

பல துறைகளில் சிறந்து விளங்கும் பிரபலங்களை அச்சுஅசல் அப்படியே மெழுகு சிலைகளாக வடிவமைத்து உலக அளவில் புகழ் பெற்ற அருங்காட்சியகம் மேடம் துசாட்ஸ். இதில் இந்திய பிரதமர் மோடி, ஜாம்பவான் சச்சின், பாலிவுட பிரபலங்களான அமிதாப் பச்சான், ஷாருக் கான், ஹிரித்திக் ரோசன், ஐஸ்வர்யா ராய், ஆகியோர் இந்த அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளனர்.
இந்தவரிசையில், முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவும் இடம்பிடித்துள்ளார். இவரது சிலை டில்லியில் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. முன்னாள்இந்திய கேப்டன் கபில்தேவ் 58. இவரது தலைமையில் கடந்த 1983-ல் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் முறையாக இந்திய அணிக்கு உலகக்கோப்பை வென்றது. இவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகம் மெழுகு சிலை வைக்க முடிவு செய்தது.

அந்த மெழுகு சிலை கபில் தேவ் பந்து வீசியது போல வடிவமைத்து அங்கே ரசிகர்களின் கட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது, இதனை ரசிகர்கள் அனைவரும் கண்டு கழித்து வருகிறார்கள்.

Vignesh N: Cricket Lover | Movie Lover | love to write articles

This website uses cookies.