தோனி தலைமையில் மிகவும் வலிமைவாய்ந்த ஐபிஎல் அணி தயார்

கிரிக்இன்போ இணையதளம் அனைத்துகால சிறந்த ஐபிஎல் அணியை தெரிவு செய்து வௌியிட்டுள்ளது.

இந்த அணிக்கு டோனியை தலைவராக தெரிவு செய்துள்ளது, அணியில் அதிரடி வீரர் ஏ.பி.டிவில்லியர்ஸ் 12வது வீரராக இடம் பெற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மொத்தம் இந்த அணிக்காக 31 வீரர்கள் தெரிவு செய்யப்பட்டனர், இதில் 14 அயல்நாட்டு வீரர்கள் அடங்குவர். இந்த 14 அயல்நாட்டு வீரர்களில் 4 பேரை குழுவினர் தெரிவு செய்துள்ளனர். ஆறு வாரங்கள் வாசகர்கள் வாக்களித்ததன் படி, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் 5 பேர் உட்பட 17 பேர் கொண்ட குழு இந்த அணியை தெரிவு செய்துள்ளது.

அனைத்துகால சிறந்த ஐபிஎல் அணி: டோனி (தலைவர், விக்கெட் கீப்பர்), கிறிஸ் கெய்ல், விரேந்திர சேவாக், விராட் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா, ரோஹித் சர்மா, டிவைன் பிராவோ, சுனில் நரைன், அஸ்வின், புவனேஷ் குமார், லஷித் மலிங்கா, ஏ.பி.டிவில்லியர்ஸ் 12-வது வீரர் என்று இந்தக் குழு ஏகமனதாக முடிவெடுத்துள்ளது.

மேலும் இளம் வீரர்கள் யாரும் இந்த அணியில் இடம் பெறாதது சற்று ஏமாற்றத்தை அளித்து உள்ளதாக ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.

ஆறு துடுப்பாட்டகாரர்கள், ஒரு ஆல்ரவுண்டர், நான்கு பந்து வீச்சாளர்கள் என்ற முறையில் இந்த அணி தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அணியை கண்டு அணைத்து ஐபிஎல் ரசிகர்களும் ஆதரவு தெரிவித்தனர்.

Vignesh N: Cricket Lover | Movie Lover | love to write articles

This website uses cookies.