ரெய்னா,கம்பீர் சாதனைகளை முறியடித்த விராட் கோலி: ஆரோன் பிஞ்ச்சின் வித்தியாசமான ‘ரெக்கார்டு’ தெரியுமா? 1

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் கவுதம் கம்பீர், சுரேஷ் ரெய்னா சாதனைகளை முறியடித்து, பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி தனி மனிதராக ஜொலித்து வருகிறார்.

11-வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. மும்பையில் நேற்று நடந்த 14-வது போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை 46 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது மும்பை இந்தியன்ஸ் அணி. இந்த போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட் கோலி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 62 பந்துகளுக்கு 92 ரன்கள் சேர்த்தார். இதில் 4 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடங்கும்.ரெய்னா,கம்பீர் சாதனைகளை முறியடித்த விராட் கோலி: ஆரோன் பிஞ்ச்சின் வித்தியாசமான ‘ரெக்கார்டு’ தெரியுமா? 2

ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் முன், ஒட்டுமொத்த ஐபிஎல் போட்டிகளில் அதிகபட்சமாக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சுரேஷ் ரெய்னா முதலிடத்தில் இருந்தார். ரெய்னா 163 இன்னிங்ஸ்களில் விளையாடி 4,558 ரன்கள் சேர்த்து இருந்தார்.

ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் விராட் கோலி 92 ரன்கள் சேர்த்தன் மூலம் ரெய்னாவின் சாதனையை முறியடித்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் அதிகபட்சமாக 4,619 ரன்கள் சேர்த்து தற்போது விராட் கோலி முதலிடத்தில் இருக்கிறார். இதற்காக அவருக்கு நேற்ற ஆரஞ்சு நிற தொப்பி வழங்கப்பட்டது.ரெய்னா,கம்பீர் சாதனைகளை முறியடித்த விராட் கோலி: ஆரோன் பிஞ்ச்சின் வித்தியாசமான ‘ரெக்கார்டு’ தெரியுமா? 3

அதுமட்டுமல்லாமல், ஐபிஎல் போட்டிகள் தொடங்கியதில் இருந்து ஒரே அணிக்காக விளையாடி விரைவில் 5 ஆயிரம் ரன்கள் எட்டப்போகும் முதல் வீரரும் கோலி என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் போட்டியில், ரெய்னா 4,558 ரன்களுடன் 2-ம் இடத்திலும், ரோகித் சர்மா 4,345 ரன்களுடன் 3-ம் இடத்திலும், கம்பீர் 4,210ரன்களுடன் 4-ம் இடத்திலும், டேவிட் வார்னர் 4014 ரன்களுடன் 5-வது இடத்திலும் உள்ளனர்.

ரெய்னா,கம்பீர் சாதனைகளை முறியடித்த விராட் கோலி: ஆரோன் பிஞ்ச்சின் வித்தியாசமான ‘ரெக்கார்டு’ தெரியுமா? 4

ரெய்னா, கம்பீர், ஆரோன் பிஞ்ச்

அதுமட்டுமல்லாமல், இதுவரை ஐபிஎல் போட்டிகளில் அதிகமான அரைசதம்அடித்தவர்கள் பட்டியலில் டெல்லி டேர்டெவில்ஸ் கேப்டன் கவுதம் கம்பீர் 53 அரை சதங்களுடன் முதலிடத்தில் இருந்தார். ஆனால், நேற்றைய போட்டியில் விராட் கோலி தனது 54-வது அரைசதம் அடித்தது கம்பீரின் சாதனையை முறியடித்துள்ளார்.

இந்த ஐபிஎல் போட்டிகளில் இதுவரை தனிஒரு வீரரின் அதிகபட்ச ஸ்கோராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் சஞ்சு சாம்சன், பெங்களூரு அணிக்கு எதிராக 92 ரன்கள் சேர்த்தே அதிகபட்சமாக இருந்தது.ரெய்னா,கம்பீர் சாதனைகளை முறியடித்த விராட் கோலி: ஆரோன் பிஞ்ச்சின் வித்தியாசமான ‘ரெக்கார்டு’ தெரியுமா? 5

ஆனால் அந்த சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா முறியடித்தார். பெங்களூரு அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ரோகித் சர்மா 94 ரன்கள் சேர்த்ததே நடப்பு ஐபிஎல் போட்டியில் தனி ஒரு வீரரின் அதிகபட்சமாகும்.

ஆரோன் பிஞ்ச் வித்தியாசம்:

ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பிஞ்ச் 11-வது ஐபிஎல் சீசன் போட்டியில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார். அவர் வித்தியாசமான சாதனையை படைத்துள்ளார். ஐபிஎல் வரலாற்றிலேயே அதிகமான அணிகளுக்காக விளையாடிய முதல் வீரர் ஆரோன் பிஞ்ச் ஆவார். இதுவரை ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், புனே வாரியர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பை இந்தியன்ஸ், குஜராத் லயன்ஸ் ஆகிய 7 அணிகளுக்காக பிஞ்ச் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ஆரோன் பிஞ்ச் கூறுகையில், எனக்கே வெட்கமாக இருக்கிறது. என்ன செய்ய ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு அணிக்காக விளையாடி வருகிறேன் எனத் தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *