ரோஹித் ஷர்மாவை பற்றி புகழ்ந்து பேசிய ரோஹித் ஷர்மாவின் மனைவி

ஹைதராபாதில் மே 21இல் நடைபெற்ற 10-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் மும்பை அணி 1 ரன் வித்தியாசத்தில் ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ் அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக கோப்பையை வென்றது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் புணேவின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 11 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. ஆனால் அந்த ஓவரை வீசிய மிட்செல் ஜான்சன், மனோஜ் திவாரி, ஸ்டீவன் ஸ்மித் ஆகியோரை வீழ்த்தியதோடு, 9 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இதனால் மும்பை அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி கண்டது. இந்த வெற்றி யாரும் எதிர் பார்க்காத வெற்றியாகும்.

இந்நிலையில் ஐபிஎல் போட்டி முடிந்தபிறகு ரோஹித் சர்மாவின் மனைவி ரித்திகா, சமூகவலைத்தளத்தில் தன் கணவர் குறித்து கூறியதாவது:

“வாழ்த்துகள். உங்கள் ஐபிஎல் அணி இன்னொரு ஐபிஎல் கோப்பையை வென்றதற்காக அல்ல, கடந்த 6 மாத கடினமான காலகட்டத்தில் நீங்கள் பட்ட வேதனைகளை நான் அறிவேன். அதிலிருந்து மீண்டு வந்து முன்பை விடவும் உறுதியாக நின்று வெற்றி பெற்றதற்கு என் வாழ்த்துகள்.
நான் அறிந்த மனவலிமை உடைய வீரர் நீங்கள்தான். உங்களை எண்ணி மிகவும் பெருமைப்படுகிறேன்” என்று கூறியுள்ளார்.

Vignesh N: Cricket Lover | Movie Lover | love to write articles

This website uses cookies.