5.மிஸ்பா உல் ஹக்
பாகிஸ்தான் அணிக்கு ஒரு நல்ல பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் இருந்தால் கூட, இவருக்கு வெறுப்பாளர்கள் இவரது நாட்டிலேயே அதிகம். ஒருநாள் போட்டியில் கூட டக் டக் என டெஸ்ட் போட்டியைப் போல ஆடுகிறார் என பலர் இவருக்கு ஹேட்டர்களாக உள்ளனர். அதனையும் தாண்டி 2007 டி20 உலகக்கோப்பையின் போது இந்தியாவிற்கு எதிராக இவர் ஆடிய அந்த கடைசி ஷாட் இவருக்கு எண்ணற்ற வெறுப்புகளை உருவாக்கியது.