நல்ல கிரிக்கெட் வீரராக இருந்தும் கேப்டன்ஷிப்பில் சொதப்பிய 10 சிறந்த் வீரர்கள்!!
கிரிக்கெட் களத்தில் கேப்டன் என்பவர் மிகவும் முக்கியமானவர். ஒவ்வொரு வீரரின் திறமையையும், அவரால் என்ன முடியும், அணிக்காக அவரால் என்ன கொடுக்க முடியும் என்று அறிந்து வைத்து அணியை வெற்றி வெற வைப்பதே கேப்டன்னுடைய பணியாகும்.
1.ஒவ்வொரு சிறந்த கேப்டனும் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
2.ஒவ்வொரு சிறந்த பேட்ஸ்மேன் சிறந்த கேப்டனாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
3.ஒவ்வொரு சிறந்த கிரிக்கெட் வீரரும் சிறந்த கேப்டனாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
இவ்வாறு சிறந்த கிரிக்கெட் வீரராக இருந்தும் கேப்டன்ஷிப்பில் சொதப்பிய வீரர்கள்பற்றி இன்று காண்போம்
பிரையன் லாரா
இவருடைய காலகட்டத்தில் இவர் தான் மிகச்சிறந்த இடதுகை பேட்ஸ்மேன் ஆவார். அவருடைய அற்புதமான ஆட்டத்தை பார்க்க பல லட்சக்கணக்கில் மக்கள் கூடுவார்கள். கிரிக்கெட் உலகில் 20,000 ரன்கள் குவித்த அவர், அதிகபட்சமாக 400 ரன்கள் ஒரே போட்டியில் அடித்துள்ளார். இவ்வாறு பல சாதனைகளை படைத்துள்ள இவர் கேப்டனாக பெரிதாக வெற்றிபெறவில்லை. மொத்தம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 125 போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார், இதில் 50 சதவீதத்துக்கும் குறைவான வெற்றிகளைப் பெற்றுள்ளார். மொத்தம் 47 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்தவர் 26 டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளார்.