அலஸ்டேர் குக்
இங்கிலாந்து அணிக்கு கேப்டனாக இருந்த இவர் இவரது கிரிக்கெட் வாழ்க்கை மேலும் கீழுமாக இருந்தது. கிட்டத்தட்ட சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிடப்பட்டவர். மொத்தம் 167 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். 33 சதங்கள் அடித்து 12740 ரன்களை எடுத்துள்ளார். பேட்டிங்கில் அற்புதமாக செயல்பட்டு அவரால் கேப்டனாக பெரிதாக நன்றாக செயல்பட முடியவில்லை. 59 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்கு கேப்டனாக இருந்து 22 டெஸ்ட் போட்டிகளில் தோற்று 13 போட்டிகளை டிரா செய்துள்ளார். மேலும், 69 ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக இருந்து 30 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்.