ராகுல் டிராவிட்
உலகின் தலைசிறந்த டெஸ்ட் ஆட்டக்காரர் என்று பெயர் பெற்றவர். இந்திய அணியின் தடுப்புச் சுவர் என்று பெயர் பெற்றவர். மொத்தம் 24,000 சர்வதேச ரன்களை விளாசியுள்ளார். 146 அரைசதங்கள் 48 சதங்கள் என பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர். ஆனால் கங்குலியிடம் இருந்து 2005 ஆம் ஆண்டு கேப்டன்சியை பெற்றார். இருந்தாலும் இந்திய அணி வெற்றிகரமாக வழி நடத்த முடியவில்லை. 25 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை வழி நடத்தி 11 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று கொடுத்தார். 79 ஒருநாள் போட்டிகளில் 42 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்ற கொடுத்தார். இவ்வாறு மோசமான கேப்டன் என்ற பெயரைப் பெற்றுள்ளார்.