விக்கெட் எடுப்பது என்றாலே பந்து வீச்சாளார்களுக்கு அதி பயங்கர மகிழ்ச்சி தான் . அதுவும் பேட்ஸ்மேனின் ஸ்டெம்புகளை சிதறடிப்பது என்பது அலாதியானது . அதுவே, 6 பந்துகளுக்கு 6 விக்கெட் என்றால்?. அந்த 6 விக்கெட்ட்குகளும் ஸ்டெம்ப்புகள் தெறிக்க தெறிக்க வந்தது என்றால்?. எப்படி இருக்கு பந்து வீச்சாளாருக்கு ? அளவிள்ளா இன்பம் கண்டிருப்பர் அல்லவா? இது போன்று நடக்க வாய்ப்புகள் உள்ளாதா? எனக்கூட சந்தேகம் கொள்வோம். ஆனால் நடந்துள்ளது. அது தான் உண்மை.
ஆம் இங்கிலாந்தில் உள்ள பள்ளியில் 13 வயதே ஆன ஒரு திறமை மிகு சிறுவன் இந்த சாதனைய படைத்துள்ளான். பள்ளிகளுக்கு இடையேயான போட்டியில் இந்த அறிய சாதனையை படைத்துள்ளார். 6 விகெட்டுகளும் க்ளீன் போல்டு என்பது இதன் தனிச்சிறப்பு. இந்த 13 வயதுக்காரரின் பெயர் லூக் ராபின்சன். அவர் ஆடியது வடகிழக்கு இங்கிலாந்தில் உள்ள பிலடெல்பியா கிரிக்கெட் க்ளபிற்க்காக.
இதில் மற்றோர் சுவாரஸ்யம் என்னவென்றால், அதே மேட்ச்சில் தான் அவரது தந்தையும் இருந்தார் என்பது. அவர் வீசிய ஆறு அற்புதமான பந்துகளையும் அவர் அழகாக காணும் அளவு போட்டியின் நடுவராக இருந்தார். அதுவும் போக குடும்பமே அந்த போட்டியிள் இருந்தது என்பது இன்னும் ஓர் சுவாரசியம். ஆம, லீக் ராபின்சன் பந்து வீசும் போது அவரது அண்ணன் ராபின்சன் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்தார். மேலும் அவரது தாய் ராபின்சன் அதே போட்டியிள் ஸ்கோரர் ஆவார். அவரது தாத்தா ராபின்சன் பார்வையாளராக அமர்திருந்தார் வேறு. குடும்பத்திற்க்கு பெருமை சேர்த்தது லீக் ராபின்சன் அவர்களின் குடும்பட்திற்க்கு முன்னரே.
இதை பற்றி அவருடைய தந்தை ஸ்டீபன் ராபின்சன் கூறியதாவது ” நான் 30 வருடங்களாக கிரிக்கெட் விளையாடி வருகிறன். நான் எனது வாழ்வின் பல முறை ஹாட் ட்ரிக் எடுத்துள்ளேன். ஆனால் என் மகனைபோல் ஆறு பந்துகளுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தியது இல்லை. அதுவும் அனைத்தும் க்லீன் போல்டுகளாக என்னால் வீழ்த்த வாய்ப்பே இல்லை. என்னால் இன்னும் இதனை நம்ப முடியவில்லை. என மனம் நெகிழ்ந்தார் ஸ்டீபன் ராபின்சன்.
மற்றொன்று :
இந்த வருட தொடக்கத்தில் ஆஸ்திரலியாவில் நடந்த க்ளப் மேட்ச்சில் கல்டன் பாய்ண்ட் கிரிகெட் க்ளப்பிற்க்கு எதிராக பல்லாரட் கிரிகெட் சங்கம் ஆடிய போது இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதில் 29 வயதான ஆலட் கேரி ஒரே அவரில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பதுகுறிப்பிடத்தக்கது. ஆனால், லூக் ராபின்சன் வீழ்த்தியது போல் ஆறும் க்லீன் போல்டு இல்லை. அது ராபின்சனின் தனிச் சிறப்பு.
சர்வதே அரங்கில் யாரும் இதுவரை இப்படி ஒரு சாதனையை படைத்தது இல்லை என்பதே நிதர்சனம். அதிகபட்சமாக . ஒரே ஓவரில் 4 விக்கெடுகள் வீழ்த்தப்பட்டுள்ளது. மொத்தம் 7 பந்து வீச்சாளர்கள் இதுவரை ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். டெஸ்ட் போட்டிகளில் 6 பேரும் ஒரு நாள் போட்டியிள் ஒருவரும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
6ல் 5 பேர் இங்கிலாந்து வீரர்கள், ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்த வாசிம் அக்ரம் 1990 இல் மேற்கிந்திய தீகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிள் ஒரே ஓவரில் 4 விக்கெட் வீழ்த்தினார். ஒரு நாள் போட்டியிள் 2007 இல் லசித் மலிங்க தென்னாபிரிக்க அணிக்கு எதிராக 4 விக்கெடுகளை வீழ்த்தினார்.