19 வயது இளம் வீரர் ஹாட்ரிக் எடுத்து சாதனை

பெரியவர்கள் ‘முதல் தோற்றமே சிறந்த தோற்றம்’ என கூறுவார்கள், அது இலங்கை அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் வனிடு ஹஸரங்காவுக்கு பொருந்தியது. ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார் இலங்கை அணியின் இளம் பந்துவீச்சாளர் வனிடு ஹஸரங்கா.

2017ஆம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை பதிவு செய்த மூன்றாவது இளம் வீரராக வனிடு ஹஸரங்கா விளங்குகிறார். முதலில் வங்கதேசத்தின் டைஜூல் இஸ்லாம் ஜிம்பாப்வேக்கு எதிராக 2014இல் ஹாட்ரிக் எடுத்தார். பிறகு 2015-இல் வங்கதேசத்துக்கு எதிராக தென்னாபிரிக்காவின் காகிஸோ ரபாடா ஹாட்ரிக் எடுத்தார்.

3 தந்திர பந்துகளே போதும்:

இந்த கிரிக்கெட் போட்டியில் பேட் மற்றும் பந்திற்கும் இடையே நடக்கும் ஒரு போர். பேட்ஸ்மேன் அல்லது பந்துவீச்சாளர்களில் யாரவது ஒருவர் சரணடைய வேண்டும். ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுக்க, பேட்ஸ்மேனை திணற வைத்து மூன்று தந்திர பந்துகளை வீசவேண்டும்.

இந்த இளம் சுழற்பந்து வீச்சாளரான வனிடு ஹஸரங்காவை யாரும் மறக்க மாட்டார்கள். இந்த இளமை வயதிலேயே முக்கியமான சாதனையை படைத்துள்ளார். ஜிம்பாப்வேயின் டைல்-எண்டர்சை சரணடைய வைத்தார் வனிடு ஹஸரங்கா.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.