தொடர்ச்சியாக ஒவ்வொரு வீரர்களையும் தரக்குறைவாக விமர்சித்து வரும் சந்தை மாதிரி தற்போது மீண்டும் இரண்டு இந்திய பந்துவீச்சாளர்கள் மீது தனது வன்மத்தை கக்கியுள்ளார்
இங்கிலாந்தில் நடந்து வரும் 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை எட்டி விட்டது. இதில் மான்செஸ்டரில் நேற்று அரங்கேறிய முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, நியூசிலாந்தை எதிர்கொண்டது. இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றமாக குல்தீப் யாதவுக்கு பதிலாக யுஸ்வேந்திர சாஹல் சேர்க்கப்பட்டார். வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்த போட்டியில் இரண்டு பந்துவீச்சாளர்கள் இந்த இந்திய அணிக்கு தேவையில்லாதவர்கள் எனவும் செட் ஆகாத பந்துவீச்சாளர்கள் எனவும் கூறியுள்ளார். ஆனால் அந்த இருவர், யார் என்று தெரியவில்லை. கண்டிப்பாக ஒன்று ஜடேஜா வாக இருக்கும் மற்றொன்று ஹர்திக் பாண்டியா அல்லது யுஜயேந்திர சகாலாக இருக்கும்.
India have taken a slight risk playing just 5 bowlers out of which 2 are not ideally suited for this pitch. #CWCUP2019
— Sanjay Manjrekar (@sanjaymanjrekar) July 9, 2019
ஏற்கனவே,

மேலும்,
கடந்த ஐபிஎல் தொடரின்போது மும்பை அணிக்கு ஆதரவாக நடந்துகொண்ட சஞ்சய் மஞ்ச்ரேக்கர் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட அணிகளை கடுமையாக சாடி வந்தார். தோனியின் ஆட்டம் குறித்தும் தொடர்ந்து அவதூறாகப் பேசி வருகிறார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்.
இந்திய வீரர்களை மோசமாக விமர்சித்து வருவதால் கோபமான கிரிக்கெட் ரசிகர்கள் உலகக்கோப்பைக்கான வர்ணனையாளர் பணியில் இருந்து சஞ்சய் மஞ்ச்ரேக்கரை நீக்கவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக, கையெழுத்து இயக்கம் ஒன்றையும் தொடங்கி நடத்தி வருகின்றனர் ரசிகர்கள். அதில், சஞ்சய் மஞ்ச்ரேக்கரை வர்ணனையாளர் குழுவில் இருந்து நீக்க வலியுறுத்தி இதுவரை 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.