அனைவரும் எதிர்பார்த்த இந்தியா- பாகிஸ்தான் போட்டியில் பாகிஸ்தானை 124 விக்கெட் விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா. அதன் பிறகு, ஜூன் 8ஆம் தேதி இலங்கை அணியுடன் விளையாடப்போகிறது இந்தியா.
எட்பாஸ்டன் மைதானத்தில் நடந்த இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் 24,000-இற்கும் மேல் நேரில் கண்டனர். அந்த மைதானத்தில் அதிக ரசிகர்கள் கண்ட போட்டி அதுதான்.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தொடக்கத்தில் பொறுமையாக விளையாடிய இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள். ஆனால், கடைசி நேரத்தில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை அடித்து நொறுக்கினார்கள்.
ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, யுவராஜ் சிங் ஆகியோர் அரைசதம் அடிக்க முதல் இன்னிங்சின் முடிவில் 319 ரன் அடித்தது இந்தியா.
கண்ணோட்டம்:
பாகிஸ்தானை 124 ரன் வித்தியாசத்தில் வென்ற இந்தியா, இரண்டாவது போட்டியில் இலங்கை அணியுடன் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற நினைக்கும்.
நாளை போட்டியில் மழை குறுக்கிட வாய்ப்பு உள்ளது, அதனால் போட்டியும் பாதிக்க வாய்ப்பு உள்ளது என வானிலை அறிக்கை தகவல் அளித்தது. அப்படி மழை பெய்து டக்ஒர்த்-லெவிஸ் முறை பயன்படுத்தினால், இரண்டாவதாக பேட்டிங் விளையாடும் அணிக்கு தான் சாதகம்.
ஆனால் இந்த தொடரில் 6 போட்டிகளில் டக்ஒர்த்-லெவிஸ் பயன்படுத்திய போட்டியில், 4 முறை முதலில் பேட்டிங் விளையாடிய அணிதான் வெற்றி பெற்றுள்ளது.
முக்கிய புள்ளிகள்:
பாகிஸ்தானுடன் விளையாடிய அணியே இலங்கை அணியுடன் விளையாடுவது சந்தேகம்.
தாஹிரின் சூழலுக்கு இலங்கை வீழ்ந்ததால், இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வினை உள்ளே கொண்டுவருவார் கேப்டன் விராட் கோலி.
இதனால், இலங்கைக்கு எதிரான போட்டியில் அஸ்வினுக்கு பும்ரா வழிவிடுவார் என எதிர்பார்க்க படுகிறது. இதனால், அஸ்வின் – ஜடேஜா ஜோடி இலங்கையை சின்னாபின்னம் ஆக்க வாய்ப்பு உள்ளது.
எதிர்பார்க்கும் அணி:
ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (கே), யுவராஜ் சிங், எம்.ஸ். தோனி, கேதார் ஜாதவ், ஹர்டிக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ்.