அண்டர்-19யின் டான் பிராட்மேன் சுப்மான் கில்!! 1

18 வயதான இந்திய வீரர் சுப்மன் கில், ‘ரன் மெஷினாக’ திகழ்கிறார். கடந்த ஆகஸ்டில் இங்கிலாந்து மண்ணில் நடந்த மூன்று (147 ரன்) மற்றும் நான்காவது ஒரு நாள் போட்டியில் (66) இவர் அசத்தினார். தற்போதைய, உலக கோப்பை தொடரின் லீக் சுற்றின் (எதிர்-ஆஸ்திரேலியா-63 ரன், ஜிம்பாப்வே- 90) இரண்டு போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டார். தொடர்ந்து, காலிறுதி (வங்கதேசம்-86), அரையிறுதியிலும் (எதிர்- பாக்., 102) ஜொலித்தார். இதன் மூலம், 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒரு நாள் போட்டியில் தொடர்ந்து 6 முறை அரை சதம் கடந்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார்.அண்டர்-19யின் டான் பிராட்மேன் சுப்மான் கில்!! 2

19 வயதுக்குட்பட்டோருக்கான 14 ஒருநாள் போட்டியில் 1188 ரன்கள் எடுத்துள்ள இவரது ரன் சராசரி 111.80 ஆக உள்ளது. இது உலக கிரிக்கெட்டில் அதிக சராசரி வைத்துள்ளார் ‘ஜாம்பவான்’ பிராட்மேனை (டெஸ்டில், 99.94) அதிகம்.

சுப்மான் கில் பஞ்சாப் மாநிலம் பிரோஸ்பூரை சேர்ந்தவர். இவரது தந்தை விவசாய தொழில் செய்து வருகிறார். கில்லுக்கு சிறு வயதிலிருந்தே கிரிக்கெட் மீது மிகுந்த ஆர்வம்.அதனாலே அவரது தந்தை அவர்களது கிராமத்தில் இருந்து அவரை அழைத்துக்கொண்டு குடும்பத்துடன் மொஹாலி வந்துள்ளார். அங்கு கிரிக்கெட் உள்ள பள்ளியில் அவரை சேர்த்தும் விடுகிறார்.

அங்கு அவர் கிரிக்கெட்டில் ஜொலிக்க  பஞ்சாபின் u-11, u-16 ஆகிய அணிகளுக்கு தேர்வு ஆகிறார். அங்கும் சிறப்பான விளையாட்டை வெளிபடுத்திய அவர், இளம் பஞ்சாப் அணிக்கு முக்கிய வீரராக மாறுகிறார்.குறிப்பாக விஜய் மெர்ச்சண்ட் ட்ராபியின் ஒரு u-16 போட்டியில் மத்தியபிரதேச அணிக்கு எதிராக அவர் அடித்த இரட்டை சதம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. அண்டர்-19யின் டான் பிராட்மேன் சுப்மான் கில்!! 3

அவரது தொடர்ச்சியான ஆட்டத்தை பார்த்த பி.சி.சி.ஜ, இங்கலாந்தில் நடக்கவுள்ள 19வயதுக்கு உட்பட்ட இந்தியா மற்றும் இங்கலாந்து எதிரான தொடருக்கு அவரை தேர்வு செய்து அனுப்பியது.

அங்கு தான் அவரின் வாழ்க்கையில் மிக முக்கிய திருப்புமுனை, முதல் டெஸ்ட் போட்டி செஸ்டர்ஃபில்ட்டில் முதல் இன்னிங்கஸில் 29 ரன், அடுத்த இன்னிங்க்ஸில் 25 ரன் அடுத்த டெஸ்டில் முதல் இன்னிங்கிஸில் 18 ரன் மட்டுமே அடித்தார். மூன்று இன்னிங்கிசிலும் சொதப்பல்.

ஆனால், அதற்கடுத்த இன்னிங்கசில் (2வது டெஸ்டின் 2வது இன்னிங்கிஸ்) 102 ரன் அடித்தார். அந்த சதம் இந்தியா ஜூனியர் அணியில் அவரை நிலையான இடத்தில் கொண்டு வந்து நிறுத்தியது.அண்டர்-19யின் டான் பிராட்மேன் சுப்மான் கில்!! 4

முதல் டெஸ்டில் அதிக ரன் அடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் முதலில் நிறைய பந்துகளை எதிர்கொண்டதால் விரைவில் அவுட்டாக நேரிட்டது என்றார்.

2வது டெஸ்ட்டில் இருந்து தற்போது வரை தான் அடித்து விளையாடுவதாகவும் அதன் பின்னரே தன்னுடைய ஸ்கோர் உயர தொடங்கியதாகவும் அதுவே தனது இயல்பான ஆட்டம் என்றும் தெரிவித்தார். இயல்பான ஆட்டத்தை விடுத்து தடுப்பு ஆட்டத்தில் ஈடுபட்டதால் தன்னால் முதல் இரு இன்னிங்கிசில் அடிக்க முடியவில்லை என்றும் தெரிவித்தார்.

அதன் பின்பு இங்கிலாந்துக்கு எதிரான 5 ஒரு நாள் தொடரில், 4 போட்டிகளில் பேட் செய்து 278 ரன் அடித்தார். அதில் ஒரு மேட்சில்  147 ரன் அடித்தார்.இவரது ஆட்டத்தை பார்த்த இங்கலாந்து ஜாம்வான்கள் இவர் தான் இந்தியாவின் எதிர்கால விராத் கோலி என்று தெரிவித்தனர்.அண்டர்-19யின் டான் பிராட்மேன் சுப்மான் கில்!! 5

அதனை தொடர்ந்து தான் அவருக்கு தற்போது ஜூனியர் உலக கோப்பை அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இங்கு அவர் விளையாடிய 5 ஆட்டங்களில் 4 ஆட்டங்களில் மட்டுமே பேட் செய்தார். அதில் ஒரு சதம் மற்றும் மூன்று அரை சதம் என 341 ரன்கள் அடித்துள்ளார்.

எது எப்படி இருந்தாலும் ஜூனியர் கிரிக்கெட் மட்டும் வைத்து ஒருவரை தீர்மானித்து விட முடியாது. ஜூனியர் கிரிக்கெட் தாண்டி அனைத்து தொடர்களிலும் சிறப்பாக செய்ல்பட்டதால் தான் கோலி மற்றும் ஷிகர் தவான் போன்றோர் அணியில் இடம் பிடித்தனர்.

சொதப்ப தொடங்கினால் உன்முகந்சந்த் மற்றும் விஜய் சோலின் நிலைமை தான்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *