2020 ஆசிய கோப்பை நடைபெறும் நாடு குறித்து அறிவிப்பு!! 1
Indian and Pakistan (R) players line up for the national anthem just before the start of the one day international (ODI) Asia Cup cricket match between Pakistan and India at the Dubai International Cricket Stadium in Dubai on September 19, 2018. (Photo by ISHARA S. KODIKARA / AFP) (Photo credit should read ISHARA S. KODIKARA/AFP/Getty Images)

2020-ம் ஆண்டுக்கான டி20 ஆசிய கோப்பை தொடரை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் பெற்றுள்ளது. போட்டி பொதுவான இடத்தில் நடைபெறும்.

கிரிக்கெட் விளையாடும் ஆசிய நாடுகளுக்கு இடையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 50 ஓவராக நடத்தப்பட்ட ஆசிய கோப்பையை இந்தியா நடத்தியது. பாகிஸ்தான் – இந்தியா இடையில் அரசியல் தொடர்பான பிரச்சனை இருந்து வருவதால் போட்டி இந்தியாவில் நடத்தப்படாமல், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் இன்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டம் சிங்கப்பூரில் நடைபெற்றது. இதில் போட்டியை நடத்தும் உரிமையை பாகிஸ்தானிடம் வழங்க முடிவு செய்யப்பட்டது. அடுத்த வருடம் டி20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இதற்கு முன்னோட்டமாக இந்தத் தொடர் கருதப்படுகிறது.2020 ஆசிய கோப்பை நடைபெறும் நாடு குறித்து அறிவிப்பு!! 2

முன்னாள் கிரிக்கெட் வீரர்களான கம்பீர் மற்றும் அப்ரிடிக்கு இடையில் பல ஆண்டுகாலமாக வார்த்தை மோதல்கள் நடந்து வருகின்றன. அவர்கள் இருவரும் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் அது தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் அப்ரிடியின் வாழ்க்கை வரலாறு புத்தகமாக வந்த போது அது மீண்டும் தொடர்ந்தது.

இதையடுத்து டெல்லி மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள கவுதம் கம்பீர் ‘இந்தியா பாகிஸ்தான் அணிகள் கிரிக்கெட் விளையாடுவது குறித்து பிசிசிஐ உறுதியான முடிவு எடுக்க வேண்டும். உலகக்கோப்பையில் இறுதிப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதவேண்டிய சூழல் ஏற்பட்டாலும் அதை தவிர்க்கவேண்டும்’ எனக் கூறினார். இது பலத்த சர்ச்சையை உருவாக்கியது.

இதுகுறித்து பாகிஸ்தான் ஊடகங்களிடம் பேசிய அப்ரிடி ‘ கம்பீர் பேசும் போது மூளையோடுதான் பேசுகிறாரா என்ற சந்தேகம் எழுகிறது. படித்தவர்கள் அல்லது புத்தி உள்ளவர்கள் இதுபோல பேசுவார்களா ?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.2020 ஆசிய கோப்பை நடைபெறும் நாடு குறித்து அறிவிப்பு!! 3

மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான 2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் வரும் வியாழக்கிழமை தொடங்குகிறது. லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து-தென்னாப்பிரிக்க அணிகள் மோதுகின்றன.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை 50 ஓவர் ஒருநாள் உலகக் கோப்பை போட்டி நடத்தப்படுகிறது. முதல் மூன்று உலகக் கோப்பை 1975, 1979, 1983 ஆகியவை 60 ஓவர்கள் அடிப்படையில் நடத்தப்பட்டன. 1987-ஆம் ஆண்டு போட்டி 50 ஓவர்கள் அடிப்படையில் நடத்தப்பட்டது.  தற்போது இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது 12-ஆவது உலகக் கோப்பை ஆகும்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *