கொல்கத்தாவில் நடைபெற்று வரும் இந்தியா, வங்காளதேசம் இடையேயான பகலிரவு டெஸ்ட் போட்டியின்போது சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்தியா- வங்காளதேசம் அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. முதல் முறையாக பகலிரவு ஆட்டமாக நடைபெறும் இந்த வரலாற்று மிக்க போட்டியை காண வங்காள தேச பிரதமர் ஹசினா, மேற்கு வங்காள மாநில முதல்வர் மம்தா உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் வருகை புரிந்தனர்.

நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் வங்காளதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. இந்திய வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியமால் அந்த அணி முதல் இன்னிங்சில் 106 ரன்களில் சுருண்டது. இதையடுத்து இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது. முதல் நாளில் ஆட்ட முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது.
இன்று 3-ம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில் EBADAT HOSSAIN ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். அடுத்து வந்த வீரர்களுக்கும் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் நடையை கட்டினர்.
இதனால், இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது
இந்நிலையில், கொல்கத்தாவின் ஜோரப்கான் பகுதியில் இந்த கிரிக்கெட் ஆட்டத்தின் போது, சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சூதாட்டத்துக்கு பயன்படுத்திய ரூ.2 லட்சம் ரொக்கப்பணம், 2 கணினிகள், செல்போன்கள் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட செல்போன்களுக்கு வந்த அழைப்புகள் மற்றும் பேசிய அழைப்புகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி நேற்று மாலை கைது செய்யப்பட்ட இந்த 3 வரும் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.