2020 ஐபிஎல் தொடரில் ஆரம்ப முதலில் வெற்றிகரமாக பயணித்த டெல்லி கேப்பிடல் சனி எதிர்பாராதவிதமாக எலிமினேட்டர் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தோல்வியை தழுவியது.
ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல் அணி 202z1 ஐபிஎல் தொடரில் மிக சிறந்த முறையில் விளையாடி வந்தது ஆனால் இந்த அணியால் கோப்பையை கைப்பற்ற முடியவில்லை,இதன் காரணமாக வருகிற 2022 ஐபிஎல் தொடரில் எப்படியாவது கோப்பையை கைப்பற்றி விட வேண்டும் என்று முனைப்போடு காத்திருக்கும் டெல்லி அணி 3 வீரர்களை மட்டும் வருகிற 2022 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் தக்கவைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லி அணி தக்கவைத்துக்கொள்ள திட்டமிட்டிருக்கும் மூன்று வீரர்கள் பற்றி இங்கு காண்போம்
ரிஷப் பண்ட்
டெல்லி அணியின் முன்னாள் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக 2021 ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேப்டன் பதவி ரிஷப் பண்டிடம் ஒப்படைக்கப்பட்டது, தனக்கு கிடைத்த அந்த பொறுப்பை மிக அற்புதமாக செய்து ரிஷப் பண்ட் 14 போட்டிகளில் 10 போட்டிகளில் டெல்லி அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.
இதன் காரணமாக இவரை அடுத்த ஆண்டும் டெல்லி அணியின் கேப்டனாக நியமிக்கலாம் என்று கருத்து வலுத்து வருகிறது,இதன் காரணமாக 2022 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் டெல்லி கேப்பிடல் அணி இவரை தக்கவைத்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.