கேதர் ஜாதவ்
தோனி கேப்டனாக இருந்தபோது தனது முதல் சர்வதேச போட்டியில் ஆடிய கேதர் ஜாதவ், கடந்த மூன்று வருடங்களாக தனக்கான இடத்தை பிடித்து வைத்திருந்தார். குறிப்பாக சுரேஷ் ரெய்னாவின் இடத்தை அவர் ஆக்கிரமித்தார். உலக கோப்பை தொடர் வரை அவர் அழைத்து செல்லப்பட்டார்.
ஆனால் ,அந்த தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அவர் பெரிதாக ரன் சேர்க்காமல் கடுமையாக சொதப்பினார். தற்போது நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இடம் பெற்றார். சொல்லப்போனால் ஹர்திக் பாண்டியாவிற்கு ஓய்வு கொடுக்கப்பட்டதால் வேறு ஒரு வீரரை எடுக்க மனமில்லாமல் இவரை உடன் சேர்த்து அனுப்பியுள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம்.
ஒருவேளை விஜய் சங்கர் எடுத்துவிட்டால் அது பாண்டியா இடத்திற்கு இன்னும் சிக்கல்கள் வரும் என்பதால் இவரை அனுப்பி வைத்தனர். எப்படி இருப்பினும் கேது ஜாதகத் தில் 34 வயதாகிறது இந்திய அணிக்குள் வந்துவிட்டால் இவரது கதை அவ்வளவுதான். ஹர்திக் பாண்டியா வந்தவுடன் கேதர் ஜாதவ் அவரது இடத்தை விட்டு விட்டு வெளியே செல்ல வேண்டியது கட்டாயம். ஏனெனில், சுழற்பந்து மற்றும் பேட்டிங் செய்ய இந்தியாவில் ஏராளமான இளம் வீரர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இனி இவருக்கும் அணியில் இடம் இல்லை என்றுதான் தெரிகிறது.