அம்பதி ராயுடு

அம்பதி ராயுடுவை பொருத்தவரை இந்திய அணிக்காக 55 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 1694 ரன்களும் 147 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 3300 ரன்களும் சேர்த்துள்ளார். இவரைத்தான் நான்காவது இடத்திற்காக இந்திய அணி நிர்வாகம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஏராளமான வாய்ப்புகள் வழங்கியது.
ஆனால் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடரில் சொதப்பியதால் விஜய் சங்கரை தேர்வு செய்தது. இதனால் சற்று சர்ச்சை எழுந்தது. அதை சரி செய்யும் வகையில் நீண்ட தொடர் என்பதால் பேட்ஸ்மேன் யாருக்காவது காயம் ஏறபட்டால் மாற்று வீரராக தேர்வு செய்யும் காத்திருப்பு பட்டியலில் அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது என்று தேர்வுக்குழு அறிவித்தது. இதனால் அம்பதி ராயுடு வாய்ப்பிற்கான முக்கிய இடத்தில் இருப்பார்.