ரிஷப் பந்த்

மிகவும் அதிரடியாக விளையாடக்கூடிய இடது கை பேட்ஸ்மனான ரிஷப் பந்த் இந்திய அணிக்காக 5 போட்டிகளில் விளையாடி 93 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் 54 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள ரிஷப் பந்த் 1736 ரன்களை எடுத்துள்ளார். இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சதம் விளாசி முத்திரை படைத்த ரிஷப் பந்த்-ஐதான் உலகக்கோப்பையில் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை மிக வலிமையாக எழுந்தது.
டோனியா? ரிஷப் பந்தா? என்ற விவாதமே நடந்தது. இறுதியில் டோனி ஆஸ்திரேலியா தொடரில் அசத்த டோனி விக்கெட் கீப்பராகவும், தினேஷ் கார்த்திக் மாற்று விக்கெட் கீப்பராகவும் தேர்வு செய்யப்பட்டனர். அதிரடி பேட்ஸ்மேன் என்பதாலும், இடது கை பேட்ஸ்மேன் என்பதாலும் இவருக்கும் அதிகமான வாய்ப்பு உள்ளது.
இந்த மூன்று வீரர்களில் எந்த வீரர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஷிகர் தவானின் இடத்தை பிடிப்பார் என்பது இந்திய ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.