1.பிரித்திவ் ஷா – 18 வயது
இந்த சிறுவன் கடந்த சில வருடங்களுக்கு முன்னரே செய்திகள் வந்துள்ளான். ஆம், பள்ளிகளுக்கு இடையிலான போட்டியில் 330 பந்துகளுக்கு 546 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்துள்ளார்.
தற்போது இந்த வருட துவக்கத்தில் நடைபெற்ற அண்டர்-19 உலகக்கோப்பை தொடரில் இம்தியா அணியின் கேப்டன் இவர்தான். மேலும், இந்திய அணி கோப்பையை வென்றதும் குறிப்பிடத்தக்கது.
இதிலிருந்து இவருடைய கேப்டன்ஷிப் திறமையை அறியலாம். தற்போது ஐபிஎல் தொடரில் டெல்லி அணியால் 1.2 கோடிக்கு வாங்கப்பட்டார். மிக அதிரடியாக ஆடி 300+ ரன்கள் குவித்துள்ளார்.
தற்போது இந்திய ஏ அணிக்காகவும் ஆடி வருகிறார் பிரித்திவ் ஷா. 18 வயதே ஆன இவர் இந்திய அணியில் இடம் பிடிக்க வேண்டும் என கங்கணம் கட்டி ஆடி வருகிறார். மேலும்,. இன்னும் சிக வருடத்தில் இந்திய அணிக்கு தேர்வாகும் பட்சத்தில் இந்திய அணிக்கு கேப்டனாகவும் வர இவருக்கு தகுதி உள்ளது.