இந்தியா இலங்கை 3 வது டெஸ்ட்

இதுவரை :

இந்தியா இலங்கையில் சுற்று பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது . முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற  இந்திய அணி இரண்டவது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைபற்றியுள்ளது.முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கில் 70 ரன்கள் குவித்து, இரண்டாம் இன்னிங்ஸ் பந்து வீச்சில் 5 விக்கெட் என மொத்தம் இந்த போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜடேஜா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்

மூன்றாவது டெஸ்ட் :

மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இல்ங்கையில் உள்ள பல்லகெலே மைதானத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கவுள்ளது. மூன்றாவது டெஸ்ட் போட்டியை வென்று சாதனை படைக்குமா என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இரு அணிகளும் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்து உள்ளன.

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சளரான நுவான் பிரதீப் பின் தொடை தசை பிடிப்பு காரணாமாக நடந்து கொண்டிருக்கும் இந்தியாவுடனான் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விளகும் நிலை ஏற்ப்பட்டுள்ளது. என இலங்கை அணியின் மேளாளர் அசுங்க்கா குருசின்ஹா கிரிக் பஸிற்க்கு தான் கொடுத்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கும் முன்னர் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான சுரங்கா லக்மாலும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விளகினார் என்பதும் குறிப்பிடதக்கது.

எரியும் தீயில் எண்ணை ஊரற்றினார் போல ஆல் ரவுண்டர் அஸ்லே குணரத்னாவும் காயம் காரணமாக முன்னரே வெளியேறிய நிலையில், முதல் டெஸ்ட்டில் இலங்கையின் அனுபவம் வாய்ந்த சுழ்ற்ப்பந்து வீச்சாளர் ரங்கனா ஹெராத் தனது இடது நடு விரலை காயப்படுத்தி கொண்டார்.முன்னனி சுழற்பந்து வீச்சாளர் ரங்கனா ஹெராத் தும் மூன்றாவது போட்டியில் விளையாட மாட்டார்.

இச்செய்தி முதல் டெஸ்ட்டில் தோல்வி அடைந்திருக்கும் இலங்கை அணிக்கு, அவ்வணியின் இரு சிறந்த வேகபந்து வீச்சாளர்கள் போட்டியில் இருந்து விழகி இருப்பது பெருத்த பின்னடைவை ஏற்ப்படுத்தி உள்ளது

இந்த தொடரில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி தொடர்ந்து 8 தொடர்களில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் தொடர்ந்து 9 தொடர்களில் வெற்றி பெற்றதே சிறந்த சாதனை ஆகும்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது ஜடேஜா பந்தை கருணாரத்னே அவருக்கே திருப்பி அடிக்க அதை பிடித்த ஜடேஜா வேகமாக ஸ்டெம்பை நோக்கி எறிந்தார். இதனால் பயந்தது போல் கருணாரத்னே திரும்பி நின்றுவிட்டார். அவரைத் தாண்டிய பந்து சகாவின் கையில் பட்டு தெறித்து பின்பக்கம் ஓடியது.

இதை பார்த்த ஆட்ட நடுவர் சர் ரிச்சி ரிச்சர்ட்சன் ஜடேஜாவின் விதிமீறலை ஐசிசியில் முறையிட்டார். இதனை ஆலோசித்த ஐசிசி ஜடேஜாவை ஒரு போட்டியில் விளையாட தடை விதித்தது.

ஜடெஜாவிற்க்கு கிட்ட தட்ட சிறந்த மாற்று அக்சர் படெல் மட்டுமே. ஆனால் தற்போது அணியுடன்  இருக்கும்  சைனாமேன் பவுலர் குல்திப் யாதவ் செயல்படுவார் என்பதில் சிறிது சந்தேகம் தான். ஏனெனில் குல்திப் யாதவ் இடது கை சுழற்பந்து வீச்சாளர் மட்டுமே அவரால் ஜடேஜாவை போல் பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் ஆகிய மூன்றிலும் சிறப்பாக செயல்பட முடியும் என தெரியவில்லை.

India’s Kuldeep Yadav, center, and his teammates celebrate the dismissal of Australia’s Glenn Maxwell during the first day of their fourth test cricket match in Dharmsala, India, Saturday, March 25, 2017. (AP Photo/Tsering Topgyal)

அதே போல் அக்சர் படேலை  எடுத்துகொண்டால், தற்போது தென்னப்பிரிக்க ஏ அணியுடனான ஒரு நாள் தொடரில் வென்ற நிலையில் அவர் தென்னாப்பிரிக்கவில் இருந்து இலங்கை வந்தபின் பயிற்ச்சியில் ஈடுபடுவார் எனத் தெரிகிறது. மேலும் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டியில் தனது விரலை காயபடுத்திக் கொண்ட ஜடேஜாவிற்க்கு மாற்றாக அக்சர் படெல் தான் அழைக்கப்பட்டர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி : பேட்டிங் (டாஸ்)

விராட், ராகுல், ரகானே, ஹர்திக், தவான்,புஜாரா, சகா,  அஷ்வின், ஷமி, உமேஷ், குல்தீப்,

இலங்கை அணி :

சன்டகன், குமாரா, பெர்னான்டோ, கருணாரத்னே, தரங்கா, சண்டிமால்,(கே)  மேத்யூஸ், குசல், தில்ருவன், மலின்டா, டிக்வெல்லா

Editor:

This website uses cookies.