கமலேஷ் நாகர்கோட்டி

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற அண்டர்-19 உலக கோப்பை தொடரில் புகழ் பெற்றவர் இவர். இவரது பந்து வீச்சின் வேகம் பல முன்னாள் வீரர்களை கவர்ந்துள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணியின் இயான் பிஷப் இவரது பந்துவீச்சை பார்த்து மிரண்டு போய் பாராட்டியுள்ளார். தொடர்ந்து 140 கிலோ மீட்டருக்கு மேல் வீசும் வல்லமை படைத்தவர். இவர் ராஜஸ்தான் அணிக்காக 2016ஆம் ஆண்டு விஜய் ஹசாரே கோப்பை தொடரில் அறிமுகமான இவர் அப்போதிலிருந்து அற்புதமாக பந்து வீசி வருகிறார். சென்ற வருடம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இவரை மூன்றரை கோடி கொடுத்து ஐபிஎல் ஏலத்தில் எடுத்தது இவருக்கு தற்போது 22 வயது ஆகிறது இதனால் இவர் விரைவில் இந்திய அணியில் இடம் பிடிப்பார்.