கௌதம் கம்பீர்

சர்ச்சைகளுக்கு பெயர் போன முன்னாள் இந்திய வீரர் எப்போதும் விராட் கோலிக்கு எதிராக பேசுவதையே வாடிக்கையாக கொண்டவர். கொல்கத்தா அணிக்கு கேப்டனாக இருந்து இரண்டு ஐபிஎல் கோப்பைகளை கைப்பற்றியுள்ளார். கம்பீர் சமீபகாலமாக விராட் கோலியின் தலைமை பண்பை கேள்வி எழுப்பி வரும் அவர் தற்போது அடுத்த கட்டத்திற்கு சென்று ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமிக்கலாம் என்று கூறியுள்ளார். மேலும், டி20 போட்டிகளில் சர்மாவை கேப்டானாக்குவதன் மூலம் இந்திய அணி உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளார்.