உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக ஆண்டிகுவாவில் வியாழக்கிழமை தொடங்கும் மே.இ.தீவுகளுடனான முதல் டெஸ்ட் ஆட்டத்தை வெற்றியுடன் தொடங்குமா இந்திய அணி என எதிர்பார்ப்பு எழுந்துளது.
மொத்தம் 72 ஆட்டங்களைக் கொண்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முதன்முறையாக நடத்தப்படுகிறது. ஏற்கெனவே ஆஸி-இங்கிலாந்து, நியூஸி-இலங்கை அணிகள் அதன் ஒரு பகுதியாக டெஸ்ட் தொடர்களில் ஆடி வருகின்றன. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் மே.இ.தீவுகளை எதிர்கொள்கிறது.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக துவங்கும் இந்தப் போட்டியில் இந்திய அணியில் இரண்டு இடங்களுக்காக கிட்டத்தட்ட ஐந்து வீரர்கள் போட்டியிட போகின்றனர். ஒரு பந்து வீச்சு ஆல்ரவுண்டர், ஒரு பேட்ஸ்மேன் என இரண்டு இடங்கள் மட்டுமே உள்ளது. இந்த இரண்டு இடங்களுக்கு அஸ்வின், ரோகித் சர்மா, ஹனுமா விஹாரி, குல்தீப் யாதவ், அஜின்கியா ரஹானே ஆகியோர் நிற்கின்றனர்.
பேட்டிங் வரிசையை பொறுத்த வகையில் ரோஹித் சர்மா, ஹனுமா விஹாரி அல்லது அஜின்கியா ரஹானே இவர்கள் மூவரில் ஒருவருக்கு மட்டுமே இடம் கிடைக்கும். பந்து வீச்சாளர்கள் வரிசையில் பொருத்தவரை ரவிச்சந்திரன் அஸ்வின் அல்லது குல்தீப் யாதவ் ஆகிய இருவரில் ஒருவருக்கு தான் இடம்.
வெஸ்ட் இண்டீசில் உள்ள ஆடுகளங்கள் முன்பு போல் புற்களுடன் வேகப்பந்து வீச்சுக்கு உகந்த வகையில் தயார்படுத்தப்படுகிறது. ஆன்டிகுவா ஆடுகளமும் அந்த வகையைச் சேர்ந்தது தான். கடந்த பிப்ரவரி மாதம் இங்கு நடந்த வெஸ்ட் இண்டீஸ்-இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரில் ஆடுகளத்தன்மை உயிரோட்டமாக இருந்ததை காண முடிந்தது. அந்த தொடரில் பலம் வாய்ந்த இங்கிலாந்தை 2-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் சாய்த்தது.
SYDNEY, AUSTRALIA – JANUARY 03: Hanuma Vihari of India bats during day one of the Fourth Test match in the series between Australia and India at Sydney Cricket Ground on January 03, 2019 in Sydney, Australia. (Photo by Cameron Spencer/Getty Images)
அதனால் இந்த தடவை வெஸ்ட் இண்டீஸ் தொடர் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு எளிதாக இருக்காது. பயிற்சி ஆட்டத்தில் புஜாராவின் சதமும், ரோகித் சர்மா, ரஹானே ஆகியோரின் அரைசதமும் நம்பிக்கை அளிக்கின்றன. பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா மிரட்டுவார்கள். சுழற்பந்து வீச்சாளர் இடத்திற்கு அஸ்வின் சேர்க்கப்படுவாரா? என்பது சந்தேகம் தான். அவர் இல்லாவிட்டால் முழங்கையை பயன்படுத்தி சுழல் ஜாலம் காட்டும் குல்தீப் யாதவ் இடத்தை ஆக்கிரமிப்பார்.