உலககோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக வீரர்கள் இருவர் அந்த அணியில் இடம்பிடித்துள்ளனர்.
12வது உலககோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் மே 30ம் தேதியன்று தொடங்க உள்ளது. இதில் பங்கேற்க உள்ள இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்தது. கோலி தலைமையிலான இந்திய அணியில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழக வீரர்கள் விஜய் சங்கர் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அம்பதி ராயுடு, ரிஷப் பந்த் ஆகியோருக்கு இந்த அணியில் இடம் கிடைக்கவில்லை. பந்து வீச்சாளர்கள் பட்டியலிலும் இளம் வீரர்கள் யாருக்கும் வாய்ப்பளிக்கப்படவில்லை..

பிசிசிஐ அறிவித்தப்படி 15 பேர் கொண்ட இந்திய அணியில் விராட் கோலி, தவான், தோனி ஆகிய முன்னணி வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். ஆல்ரவுண்டர்கள் ஹர்த்திக் பாண்டியா, கேதார் ஜாதவ் மற்றும் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா ஆகியோருக்கு அணியில் மீண்டும் இடமளிக்கப்பட்டுள்ளது.
மாற்று தொடக்க ஆட்டகாரராக தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வரும் ராகுல், மற்றும் தமிழக வீரர்கள் விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது
தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் சுழற்பந்து வீச்சாளர்கள் சாஹலும், குல்தீப் யாதவும் உலககோப்பை அணியில் இடம் பிடித்துள்ளனர். வேகபந்து வீச்சாளர் புவனேஷ் குமாருக்கும் இடமளிக்கப்பட்டுள்ளது.
அண்மை காலமாக வேகபந்தில் கோலோச்சும் பும்ரா, முகமது சமி, ஆல்ரவுண்டர் ஜடேஜா ஆகியோரும் அணியில் இடம்பிடித்துள்ளனர்
உலகக் கோப்பைக்கான இந்திய அணி விவரம்:
விராட் கோலி (கேப்டன்) ரோஹித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவண், கே.எல்.ராகுல், எம்.எஸ்.தோனி, கேதார் ஜாதவ், விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், யஜுவேந்திர சாஹல், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, ரவிந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக்.
ரிஷப் பண்ட்
இவர் கடந்த 2 வருடமாக போராடி வருகிறார். இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் நன்றாக ஆடினார். பேட்டிங் திறமையிருந்தும் இவருக்கு சரியான கீப்பிங் திறமைகள் இல்லை என்று கூறப்பட்டு வருகிறது . இந்நிலையில் இதன் காரணமாக இப்போது அணியிலிருந்து விளக்கப்பட்டுள்ளார்.

அம்பத்தி ராயுடு
இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சென்ற ஐபிஎல் தொடரில் அபாரமாக ஆடியயதன் மூலம் மீண்டும் இந்திய அணிக்குள் ரீ என்ட்ரி கொடுத்தவர் .அதன்பின்னர் நான்காவது இடத்தில் ஒரு சில போட்டிகளில் நன்றாக ஆடினார் .அதற்குப் பின்னர் அவருக்கு வந்த வாய்ப்புகளை அவர் கடுமையாக தவறவிட்டார் இதன் காரணமாக இப்போது அவர் அணியில் இடம்பெற முடியவில்லை.

உமேஷ் யாதவ்
விராட் கோலிக்கு மிகவும் பிடித்த பந்துவீச்சாளர் இவர். சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த டி20 தொடரில் இடம் பெற்றார். இந்த தொடரில் நன்றாக ஆடி இருந்தால் உலக கோப்பை அணியில் இடம் பிடித்திருப்பார். மேலும் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர்களில் இவர் சொதப்பிவிட்டார் இதன் காரணமாக இவருக்கு இடம் கிடைக்கவில்லை.

அஜின்கியா ரகானே
இங்கிலாந்து நாட்டில் குறிப்பாக நன்றாக ஆடும் வீரர் இவர். இதற்கு இந்திய அணியில் இடம் கொடுத்து இருக்கலாம். ஏனெனில் வெளிநாடுகளில் நன்றாக ஆடுவதில் வல்லவர்.

சித்தார்த் கவுல்
கடந்த சில வருடங்களாக இந்திய அணியில் உள்ளே வெளியே என ஆடிக்கொண்டிருக்கும் பந்துவீச்சாளர் இவர். இந்திய அணியில் தற்போது மூன்று வேப்பபந்து வீச்சாளர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவருக்கு காயம் அடைந்தால் இவரை எடடுக்கும் விதமாக இவரையும் அணியில் சேர்த்திருக்கலாம்.
