பெங்களூர் அணி இன்னும் கோப்பையை வெல்லாமல் இருக்க 5 காரணங்கள்! 1

பெங்களூர் அணி இன்னும் கோப்பையை வெல்லாமல் இருக்க 5 காரணங்கள்

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 2008-ம் ஆண்டில் இருந்து வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 11 சீசன் முடிவடைந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இண்டியன்ஸ் அணிகள் தலா மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இரண்டு முறையும் ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் தலா ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளன.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் முக்கியமான வீரர்கள் விளையாடினாலும் அந்த அணியால் வெற்றி மகுடம் சூட்ட முடியவில்லை. இந்திய அணி கேப்டனாக இருக்கும் விராட் கோலி, கடந்த 2013-ல் இருந்து அந்த அணியின் கேப்டனாக இருந்து வருகிறார்.

கோப்பையை பெற்றுக்கொடுக்காவிடிலும் தொடர்ந்து விராட் கோலியை அந்த அணி கேப்டனாக வைத்து வருகிறது. அதற்காக விராட் கோலி அந்த அணிக்கு நன்றி சொல்ல வேண்டும் என கவுதம் காம்பிர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கவுதம் காம்பிர் கூறுகையில் ‘‘விராட் கோலியை டோனி மற்றும் ரோகித் சர்மா உடன் ஒப்பிடக்கூடாது. அதற்கு இன்னும் நீண்ட காலம் செல்ல வேண்டியுள்ளது. விராட் கோலியை சிறந்த அல்லது சூழ்நிலையை சிறப்பாக சமாளிக்கும் கேப்டனாக நான் பார்க்கவில்லை. அவர் இன்னும் ஐபிஎல் கோப்பையை வெல்லவில்லை.பெங்களூர் அணி இன்னும் கோப்பையை வெல்லாமல் இருக்க 5 காரணங்கள்! 2

அவரது சாதனையை வைத்துதான் சிறந்த கேப்டனா? என்பதை தரம் பார்க்க முடியும். அந்த வகையில் விராட் கோலி இன்னும் கோப்பை வெல்லவில்லை. எம்எஸ் டோனி மற்றும் ரோகித் சர்மா ஆகியார் தலா மூன்று முறை சாம்பியன் கோப்பையை வென்றுள்ளனர். ரோகித் சர்மா மற்றும் டோனியுடன் விராட் கோலியுடன் ஒப்பிட இயலாது. ஏனென்றால் ஆர்சிபி அணிக்காக அவர் கடந்த 7 சீசனில்தான் கேப்டனாக செயல்பட்டுள்ளார்.

விராட் கோலி மிகவும் அதிர்ஷ்டசாலி. அத்துடன் ஆர்சிபி அணிக்கு நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால், இன்னும் அவரை கேப்டனாக வைத்துள்ளது. ஒரு அணிக்காக கோப்பையை வென்று கொடுக்க முடியாதவர்கள் ஒரு அணியில் அதிக வருடங்களாக கேப்டனாக நீடிக்க முடியாது.

ஐபிஎல் தொடரில் தவறான முடிவு எடுத்தால், பின்னர் தோல்வியடைய வேண்டியதுதான். மிகப்பெரிய போட்டிகளில் எடுக்கப்படும் முடிவுகள் சரியாக இல்லை. சரியான பேலன்ஸ் கொண்ட அணியைத் தேர்வு செய்யும்போது, அந்த அணி ஐபிஎல் தொடரை வெல்லும்’’ என்றார்.

1.சரியான தலைமை இல்லாமை

பெங்களூர் அணி இன்னும் கோப்பையை வெல்லாமல் இருக்க 5 காரணங்கள்! 3

பெங்களூர் அணியில் 2008ம் ஆண்டில் இருந்தே சரியான தலைமை இருந்ததில்லை டேனியல் வெட்டோரி அவரைத் தொடர்ந்து ஒருசில பார்ட் டைம் கேப்டன்கள் இருந்தாலும் இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி அந்த அறிக்கை கடந்த பல வருடங்களாக கேப்டனாக இருந்து வருகிறார் இவர் சரியான நேரங்களில் சரியான முடிவுகளை எடுக்காமல் பல போட்டிகளை கோட்டை விட்டுள்ளார் இதனால் அந்த அணி என்னும் கோப்பையை வெல்ல வில்லை

2.திறமையான வீரர்களை சரியாக பயன்படுத்தாமல்

பெங்களூர் அணி இன்னும் கோப்பையை வெல்லாமல் இருக்க 5 காரணங்கள்! 4

பெங்களூர் அணியின் பல திறமையான வீரர்களை அந்த அணி சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை கேஎல் ராகுல்,கிரிஸ் கெய்ல், பிரண்டன் மெக்கல்லம் என பல வீரர்கள் அந்த அணியில் இருந்தும் அவர்களை பெங்களூர் அணி கால் சரியாக பயன்படுத்த முடியவில்லை

3.சரியான பந்துவீச்சு அமையாமை

பெங்களூர் அணி இன்னும் கோப்பையை வெல்லாமல் இருக்க 5 காரணங்கள்! 5

ஒவ்வொரு வருடமும் இந்த அணியில் சரியான பந்துவீச்சு இருந்ததில்லை பேட்ஸ்மேன்கள் ஏராளம் இருந்தாலும் பந்துவீச்சு எப்போதும் சொதப்புவது தான் முடிந்துள்ளது

4.சரியான பினிஷர் இல்லாதது

Cricket, Virat Kohli, India, Australia, RCB, Twitter

சென்னைக்கு ஒரு தோணி மும்பைக்கு ஒரு ஹர்திக் பாண்டியா பொல்லார்ட் கொல்கத்தாவிற்கு ஒரு ஆண்டு ரசல் ஆகியோரைப் போன்று பெங்களூர் அணியில் ஒருவர் கூட இல்லை

5.பயிற்சியாளர் பிரிவு சரியாக இல்லாமை

பெங்களூர் அணி இன்னும் கோப்பையை வெல்லாமல் இருக்க 5 காரணங்கள்! 6

சென்னைக்கு ஒரு பிளமிங் மும்பைக்கு சச்சின் டெண்டுல்கர் கும்ப்ளே ஜான்டி ரோட்ஸ் ஆகியோரைப் போன்று பெங்களூர் அணிக்கு யாரும் இன்னும் கிடைக்கவில்லை இது அந்த அணியின் வெற்றியை அம்பலப்படுத்தியுள்ளது

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *