4.முதல் (2017) டெஸ்ட் போட்டியில் நேரத்தை வீணடிக்க செய்த ஏமாற்று வேலை
இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டிட்டில் முதல் 3 நாட்கள் இலங்கை அணி முன்னணியில் வெல்லும் வகையாக இருந்தது. கடைசி இரண்டு நாட்களில் இந்திய அணி திருப்பி அடித்து இலங்கையை வீழ்த்தும் அளவிற்கு சென்றது. கடைசி நாளில் இலங்கை அணி வெற்றிக்கு 231 ரன் அடிக்க வேண்டி இருந்தது. தொடர்ந்து காலம் இறங்கிய இலங்கை அணி 70 ரன்னிற்கு 7 விக்கெட் எடுத்து திணறியது. அந்த நாளின் ஆட்டம் முடிய இன்னும் 15 ஓவர்கள் மீதம் இருந்தது.
எப்படியும் தோற்றுவிடுவோம் எனத் தெரிந்த இலங்கை வீரர்கள், நேரத்தை கடத்த முடிவு செய்தனர். நேரத்தை பேட்டிங் செய்து கடத்த வேண்டும் என்பது தெரியாது போல் இருக்கிறது. எப்படியாவது ஏமாற்றி கடத்தி விடலாம் என நினைத்த இலங்கை வீரர்கள் அடிக்கடி கால் வலி, கை வலி என மைதானத்தில் படுத்துக்கொண்டனர். வேண்டிமென்ற செய்த இது போன்ற வேலைகளுக்கு அவர்களின் மருத்துவர்களுக்கும் ஏமாற்ற பயிற்சி கொடுத்திருப்பார்கள் போலும். வீரர்கள் மைதானத்தில் படுத்து கொண்டதும் அம்பையர் அழைக்கும் முன் இலங்கை அணியின் மருத்துவர் அவரது மருத்துவ உபகரணங்களை தூக்கிக்கொண்டு உள்ளே ஓடி வந்தார். இதனைப் கண்ட அம்பையர் கூப்பிடாமல் ஏன் வருகிறீர்கள், அவருக்கு ஒன்றும் இல்லை எனக் கூற அவருடன் வாக்கு வாதம் செய்யத் தூங்குகிறார் அம்பையர். இவ்வாறு சில முறை செய்ய நேரம் கடத்தப்பட்டது. 15 ஓவர்கள் மீதம் இருக்கும் நிலையில் இன்னும் 3 விக்கெட் எடுத்தால் போதும் என்ற நிலையில் போட்டி ட்ரா என அறிவிக்கப்பட்டது. இது போன்ற ஏமாற்று வேலைகளை செய்வதில் கில்லாடிகள் போலும் இலங்கையார்கள்.