ஆளுமைத் திறனை மேம்படுத்த தோனி கற்றுதரும் 7 பாடங்கள்! 1
In fact, it is a well known that Dhoni has inspired everyone with his unique technique. Dhoni has the ability to think two step ahead in the game which made him one of the most successful captains in the limited-overs format.
2 of 2Next
Use your ← → (arrow) keys to browse

2.முடிவை மனதில் வைத்துத் துவங்குங்கள்

வாழ்க்கையில் ஓடத் துவங்கும் முன் சென்றடைய வேண்டிய இலக்கை முதலில் கிரகித்துக் கொள்ளவேண்டியது அவசியம். ஓடும்போது இலக்கை முடிவு செய்து கொள்ளலாம் என்று ஓடுவோர், தொடங்கிய இடத்திலேயே நிற்பது போல் தான் இருக்கும். இதனை நன்கு புரிந்து கொண்டு தன் வாழ்க்கை பயணத்தைத் தொடங்கியவர் தோனி. ராஞ்சியில் சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த தோனிக்கு ஃபுட்பால் மற்றும் பேட்மின்டன் போட்டிகளில் தான் முதலில் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. 10-ம் வகுப்புக்கு மேல் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பிங் தான் தன் உலகம் என்று முடிவு செய்து அதில் நன்கு தேர்ச்சிப் பெற்று வளர்ந்தார். கிரிக்கெட் தான் உலகம் என்று முடிவு செய்ததாலோ என்னவோ கிடைத்த ரயில்வே வேலையை விட்டு களத்தில் இறங்கினார். உலகக் கோப்பை வெற்றி என்ற இலக்கை முடிவு செய்து வைத்ததாலேயே அவர் தலைமையில் உலக கோப்பையையும் வென்றார்.

ஆளுமைத் திறனை மேம்படுத்த தோனி கற்றுதரும் 7 பாடங்கள்! 2
Source : www.newstm.in

3.முதலில் செய்ய வேண்டியதை முதலில் செய்யுங்கள்

செய்யும் தொழிலில் வெற்றியை எட்டிப் பிடிக்க வேண்டும் என்றால் முதலில் எதைச் செய்ய வேண்டும், எந்த காரியத்தை பிறகு செய்ய வேண்டும் என்ற சிந்தனை இருக்க வேண்டும். இந்தச் சிந்தனை மேலோங்கி இருந்ததாலேயே தன விளையாட்டு வீரர்களின் திறமைக்கு ஏற்றாற்போல் அவர்களை நன்கு உபயோகித்து அவர்களின் முழு திறனையும் வெளிக்கொணர முடிந்தது. தன் மனைவியின் முதல் பிரசவத்தின்போது அவருடன் அருகில் இருக்க முடியாமல் தனது தேசத்திற்க்காக விளையாடுவதையே தன முதலில் செய்ய வேண்டிய கடமை என்று முடிவு செய்தார். நாட்டுக்காக விளையாடிக் கொண்டிருந்ததால் தனக்கு பிறந்த மகளைக் கூட ஐந்து மாதங்களுக்கு பிறகே வந்து பார்த்தார் தோனி. தன வெற்றியை நிலை நாட்டிய பின் இப்போது மக்களுக்கே முதலிடம். சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி நிகழ்ச்சி மேடையில் அவர் மகளை கொஞ்சி விளையாடியதே அதற்கு ஒரு சாட்சி.

ஆளுமைத் திறனை மேம்படுத்த தோனி கற்றுதரும் 7 பாடங்கள்! 3
Source : www.newstm.in

4.எனக்கும் வெற்றி… உனக்கும் வெற்றி 

ஒரு செயலை செய்ய இருக்கும்போது அந்தச் செயல் தனக்கும் வெற்றியாக அமைய வேண்டும், அந்த செயலில் ஈடுபட்டிருக்கும் பிறர்க்கும் அது வெற்றிகரமாக அமைய வேண்டும். அப்படி நினைப்பவனே தலைவனாக மிளிர முடியும். தோனி தனிமனித வெற்றி பற்றி மட்டுமே சுயநலமாக யோசிக்காமல் சக வீர்களின் வெற்றியை பற்றியும் கவலைப் பட்டதால் தான் அவர் தனது தலைமையில் பல வெற்றிகளைக் குவித்தார். “நானோ இல்லை ரெய்னாவோ செய்ய வேண்டிய வேலையை ரஹானேவிடம் கொடுத்து ஆறாவதாக பேட்டிங் செய்ய அனுப்பினால், சரியாக வராது. ரஹானே நாலாவதாகவும், ரெய்னா ஐந்தாவதாகவும், நான் ஆறாவதாகவும் பேட்டிங் செய்தால் தான் நிறைய ஸ்கோர் செய்ய முடியும்” என்று தனது வீரர்களின் வெற்றி பெரும் திறமையை பற்றி பேசும் போது அவர் அனைத்து வீரர்களுக்கும் வெற்றிக்குண்டான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தார் என்பது விளங்கும்.

ஆளுமைத் திறனை மேம்படுத்த தோனி கற்றுதரும் 7 பாடங்கள்! 4
Source : www.newstm.in

5.முதலில் புரிந்துகொள்ளுதல், பின்னர் புரியவைத்தல் 

எந்த ஒரு விஷயத்தை அணுகும்போதும் நாம் அதனை முதலில் புரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் அணுக வேண்டும். எப்போதும் எதிர் அணியினரை தாக்க வேண்டும் என்ற நோக்கில் நம் பதில்கள் இருக்கக் கூடாது. அவர்களையும் புரிந்து கொண்டு நம் கண்ணோட்டத்தையும் அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். தோனியின் ப்ரெஸ் கான்ஃபெரென்ஸ்களை உற்று நோக்கும் போது நமக்கு புலப்படும் உண்மைகள் இதுவே. ஒரு மீடியா பேட்டியில் ஒரு நிருபர் தோனியிடம் “நீங்கள் ஏன் ரிட்டயர்ட் ஆகக் கூடாது என்று கேட்டதற்கு,” சிறிதும் கோபப்படாமல் அவரை அருகில் கூப்பிட்டு அமரச் செய்து பொறுமையாக பதில் அளித்தார். தான் இன்னும் கிரிக்கெட் விளையாடுவதற்குண்டான போதிய தெம்பில் இருப்பதாக அவருக்கு அவரின் பதில்கள் மூலமாகவே புரிய வைத்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். தோனியின் இந்த கூல் கேரக்டரை அனைவரும் பழகி கொண்டால் நிறைய விஷயங்கள் எளிதில் முடியும்.

ஆளுமைத் திறனை மேம்படுத்த தோனி கற்றுதரும் 7 பாடங்கள்! 5
Source : www.newstm.in

6.கூட்டு இயக்கம் 

ஒரு படம் வெற்றி பெற வேண்டுமென்றால் அதற்கு ஒருவரின் முயற்சி மட்டுமே போதாது. படத்தின் ஒவ்வொரு துறையிலும் எல்லோரும் ஈடுபட்டு உழைத்தால் மட்டுமே அந்தப் படம் வெற்றிப்படமாக காட்சி அளிக்கும். அதேபோல் தான் விளையாட்டிலும். பேட்ஸ்மேன் பௌலர்ஸ் ஃபீல்டர்ஸ் என்று எல்லோரும் தோனியின் தலைமையின் கீழ்  ஒருங்கிணைந்து விளையாடியதால் மட்டுமே உலகக் கோப்பையை நம் வசப்படுத்த முடிந்தது. 11 பேரின் எண்ண ஓட்டங்களையும் நன்கு உணர்ந்து அதிக ஈகோ இல்லாமல் செயல்பட்டதாலேயே டோனி சிறந்த கேப்டனாக விளங்குகிறார். 1+1= 3 அல்லது மேலே என்பது தான் கூட்டு இயக்கத்தின் தத்துவமாக இந்த புத்தகத்தில் குறிப்பிடப் பட்டிருக்கும். தோனி 1+1=11 என்று தன கிரிக்கெட் வாழ்வில் நிரூபித்து காண்பித்தார்.

ஆளுமைத் திறனை மேம்படுத்த தோனி கற்றுதரும் 7 பாடங்கள்! 6
Source : www.newstm.in

7.மனதையும் உடலையும் திடமாக வைத்துக்கொள்ளுங்கள்

மேலே சொன்ன எல்லா பழக்கங்களையும் நாம் பழகினாலும், நமது மனதையும் உடலையும் திடமாக வைத்துக் கொண்டால் மட்டுமே நாம் ஆற்றல் மிகுந்த தலைவராக விளங்க முடியும். அதற்கு தேவை நம் மனதை ரிலாக்ஸ் செய்ய வைக்கும் சில யுக்திகள். “ஒரு கிரிக்கெட் டூர் முடித்துவிட்டேன் என்றால் கிரிக்கெட் பற்றிய கவலைகளை மறந்து நான் சிறிது நாட்கள் நல்ல ஓய்வெடுத்து என் பைக்கில் சுற்ற தொடங்கிவிடுவேன்” என்று தோனி பல பேட்டிகளில் கூறியுள்ளார். அவரிடம் 23 வகையான பைக்குகள் உள்ளன. அதன் எண்ணிக்கை உயர்ந்து கொண்டு தான் இருக்கிறது. செய்யும் தொழிலிருந்து எப்போதும் சிறிது வெளியே நின்று பார்க்கும் போது நமக்கு எப்போதும் ஒரு தெளிவு கிடைக்கும் என்பது தோனியின் வாழ்க்கை முறையை கூர்ந்து பார்க்கும் போது நமக்கு புரியும் உண்மை.

37 வயதில் இன்று அடியெடுத்து வைக்கும் தோனியின் வாழ்க்கை முறையிலிருக்கும் நற்சிந்தனைகளை நாமும் கற்று வழ்வில் வளம் பெறுவோமாக.

ஆளுமைத் திறனை மேம்படுத்த தோனி கற்றுதரும் 7 பாடங்கள்! 7
Source : www.newstm.in நன்றி : www.newstm.in

ஆளுமைத் திறனை மேம்படுத்த தோனி கற்றுதரும் 7 பாடங்கள்! 8

2 of 2Next
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *