இரு கைகளிலும் பந்து வீசி அசத்தல்
ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணியுடன் விளையாடுகிறது. முதல் போட்டி வரும் 17-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது
சென்னையில் நடைபெறும் வாரியத் தலைவர் அணிக்கும் ஆஸ்திரேலிய அணிக்கும் இடையிலான பயிற்சி ஆட்டத்தில் வலது கை ஆஃப் ஸ்பின் வீசிய அக்ஷய் கர்னேவர் திடீரென இடது கை ஸ்பின் வீசியதில் ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் ஸ்டாய்னிஸ் திகைத்தார்.
இடது கை வீரர் டிராவிஸ் ஹெட்டுக்குப் பந்து வீசும் போது ஆஃப் ஸ்பின் வீசிய அக்ஷய் கர்னேவர் சிங்கிள் கொடுத்தார், ஸ்ட்ரைக்குக்கு மார்கஸ் ஸ்டாய்னிஸ், வலது கை வீரர் வந்தார்,
உடனே நடுவர் இப்போது இடது கை ஸ்பின் வீசுவார் என்று அறிவிக்க ஸ்டாய்னிஸ் அதிசயித்ததோடு, லேசாகத் திகைத்தார்.
Akshay Karnewar bowling slow left-arm to right handers and right-arm off-spin to the lefties. @Sportskeeda #BPXIvAUS #AUSvBPXI pic.twitter.com/CUVC5HUK6A
— Chiggy Viggy (@IdlySambhar) September 12, 2017
ஆஸ்திரேலிய அணி 347 ரன்களைக் குவித்தது வேறு விஷயம், அதில் அக்ஷய் கர்னேவர் 6 ஓவர்களில் 59 ரன்களைக் கொடுத்து டிராவிஸ் ஹெட் விக்கெட்டை வீழ்த்தியதும் வேறு விஷயம்.
ஆனால் கிரிக்கெட்டில் இரண்டு கைகளிலும் பந்து வீசும் ஒரு வீரர் மிகவும் அரிதான நிகழ்வே.
விதர்பா கிரிக்கெட் வீரரான அக்ஷய் கர்னேவர் கிரிக்கெட்டுக்குள் புதுமையைப் புகுத்தியுள்ளார்.
ஆஃப் ஸ்பின்னராகவே இவர் தொடங்கினார், ஆனால் பேட்டிங் மற்றும் த்ரோ இடது கையில் செய்தார், இதனால் அவரது பயிற்சியாளர் இடது கை ஸ்பின்னும் முயற்சி செய்யுமாறு அறிவுறுத்தினார்.
பேட்ஸ்மென்கள் ஸ்விட்ச் ஹிட் ஆடும் போது முன் கூட்டியே தெரிவிக்க வேண்டியதில்லை,
ஆனால் பவுலர் இன்னொரு கையில் மாற்றி வீசும் போது அதை நடுவருக்குத் தெரிவித்து அதை அவர் பேட்ஸ்மெனுக்குத் தெரிவிக்க வேண்டு, கிரிக்கெட்டின் பாரபட்சமான விதிமுறைகளில் இதுவும் ஒன்று.
என்னதான் கிரிக்கெட் பேட்ஸ்மென்கள் ஆதிக்க ஆட்டமாக மாறிய போதிலும் அவ்வப்போது அஜந்தா மெண்டிஸ், தனஞ்ஜய டிசில்வா இப்போது அக்ஷய் கர்னவேர் ஆகியோர் அந்த ஆதிக்கத்தை முறியடிக்க தங்கள் தரப்பில் முயற்சி செய்கின்றனர்.
பயிற்சி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 347 ரன்களைக் குவித்தது.
பிசிசிஐ தலைவர் அணி சார்பில் 8 பேர் பந்துவீசினார்கள். ஐபிஎல்-லில் கவனம் பெற்ற சந்தீப் சர்மா, இந்திய அணியில் தேர்வான குர்கீரத் மன் ஆகியோரும் அதில் உள்ளனர்.
8 பேரில் 6 பேரின் பந்துவீச்சை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பதம் பார்த்தார்கள். கர்னேஸ்வர், கேடி படேல் ஆகியோர் சராசரியாக ஒரு ஓவருக்கு 9 ரன்களுக்கு மேல் கொடுத்தார்கள்.
சந்தீப் சர்மா, குர்கீரத், குல்வந்த் ஆகியோர் 7 ரன்களுக்கு மேல். எகானமி ரேட் 6 ரன்களுக்குள் இருந்தது இருவருக்குத்தான்.
இருவரும் தமிழக வீரர்கள். வாஷிங்டன் சுந்தர், ரஹில் ஷா.
7 ஓவர்கள் வீசி 32 ரன்கள் மட்டும் கொடுத்தார் ரஹில் ஷா. ஆனால் அவரால் விக்கெட் எதுவும் எடுக்கமுடியவில்லை.
இந்திய பந்துவீச்சாளர்களில் அசத்தியவர் வாஷிங்டன் சுந்தர்தான். 8 ஓவர்கள் வீசி 23 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஆஸ்திரேலிய கேப்டன் சுமித் மற்றும் மேக்ஸ்வெல் என இரு முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியின் ரன் குவிப்பைத் தன்னால் முடிந்தளவுக்கு கட்டுப்படுத்தினார்.
பேட்டிங்குக்குச் சாதகமான ஆடுகளத்திலும் தன்னால் ரன்களைக் கட்டுப்படுத்தமுடியும் என்று வாஷிங்டன் நிரூபித்த மற்றொரு போட்டி இது.
ஐபிஎல், டிஎன்பில்-லில் மட்டுமல்ல சர்வதேச அணிக்கு எதிராகவும் தன்னால் சிறப்பாகப் பங்களிக்க முடியும் என்பதை இந்தப் போட்டியின் மூலம் நிரூபித்துள்ளார் வாஷிங்டன் சுந்தர்.
பின்னர் ஆடிய வாரியத் தலைவர் அணி 44.2 ஓவர்களில் 244 ரன்னிற்கு ஆல் அவுட் ஆனது.