இந்தியாவை கலாந்த பாகிஸ்தான் ரசிகருக்கு செருப்படி கொடுத்த ஆகாஷ் சோப்ரா
தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் திணறி வரும் இந்திய கிரிக்கெட் அணியை கலாய்க்க நினைத்த, பாகிஸ்தானின் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ராவிடம் அசிங்கப்பட்டுள்ளார்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியில் வெறும் 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை கூட அடைய முடியாமல் 72 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த இந்திய அணி, தற்போது செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்று வரும் தென் ஆப்ரிக்காவிற்கு எதிராக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்றுள்ளது.
செஞ்சூரியனில் நடைபெற்று வரும் இரு அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி திணறி வருகிறது.
இந்நிலையில் இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா, தனது ட்விட்டர் பக்கத்தில், செஞ்சூரியன் மைதானமும் இந்திய மைதானங்களின் ஆடுகளத்தை போல் உள்ளது என்றும் இந்திய அணி சரியான பாதையில் தான் செல்கின்றது, இந்திய அணிக்கு நல்ல துவக்கம் கிடைத்துள்ளது என்றும் பதிவிட்டிருந்தார்.
இதனையடுத்து ஆகாஷ் சோப்ராவின் இந்த ட்வீட்டையும், இந்திய அணியையும் கலாய்க்கும் விதத்திலும், பாகிஸ்தானை சேர்ந்த கிரிக்கெட் ரசிகர் ஒருவர், போட்டியின் முடிவில் பார்ப்போம் யார் வெற்றி பெறுகிறார்கள் என்று கிண்டலாக பதிலளித்திருந்தார்.
இதனால் கடுப்பான ஆகாஷ் சோப்ரா, அந்த பாகிஸ்தான் ரசிகர் மூக்குடைப்படும் விதத்தில், கண்ணாடி வீட்டில் வாழ்பவர்களால் வேறு யார் மீதும் கல்லெறிய முடியாது என்று அந்த ரசிரின் ட்வீட்டிற்கு பதிலளித்தார்.
அதாவது இந்திய அணியின் வெற்றி தோல்விகளை பற்றி பேசுவதற்கு, சின்ன சின்ன அணிகளிடம் கூட படுதோல்வி அடையும் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களுக்கு அறுகதை இல்லை என்பதை தான் ஆகாஷ் சோப்ரா மறைமுகமாக கூறுயுள்ளார்.
இந்தியாவை கலாய்க்க நினைத்து ஆகாஷ் சோப்ராவிடம் அசிங்கப்பட்ட அந்த பாகிஸ்தான் ரசிகரை இந்திய ரசிகர்களும் தங்கள் பங்கிற்கு கடுமையாக கிண்டலடித்து வருகின்றனர்.