ஆஸ்திரேலிய அணியின் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணிக்கான கேப்டனாக ஆரோன் பின்சை நியமிக்கலாம் என தகவல் வந்துள்ளது. மேலும், தென்னாபிரிக்காவில் நடந்த அந்த பந்தை சேத படுத்தப்பட்ட பிரச்சனைக்கு பிறகு கேப்டன் பதவியை பிடிக்கும் ஆசையில்லை என ஆரோன் பின்ச் ஒப்புக்கொண்டார்.
அடுத்த வருடம் இங்கிலாந்தில் உலகக்கோப்பை நடக்கவிருக்கிறது, ஆனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கேப்டன் இல்லாமல் இருக்கிறது. இந்நிலையில், அடுத்த மாதம் ஆஸ்திரேலிய அணி விளையாடவுள்ள ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான அணியை அறிவிக்கும் போது கேப்டன் யார் என உறுதி செய்வார்கள்.
இதற்கு முன்பு 2014இல் இருந்து 2016ஆம் ஆண்டு வரை ஆஸ்திரேலிய டி20 அணியின் கேப்டனாக இருந்த ஆரோன் பின்ச், ஒருநாள் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு இருக்கிறார். இதனால், இந்த பொறுப்பிற்கு இவரை தேர்வு செய்ய அதிக வாய்ப்புகள் காணப்படுகிறது.
மிட்சல் மார்ஷ், டிராவிஸ் ஹெட் மற்றும் பீட்டர் ஹண்ட்ஸ்காம்ப் ஆகியோரும் கேப்டன் பதவிக்காக போட்டி போடுகிறார்கள்.
தற்போது இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் விளையாட இந்தியாவில் இருக்கும் ஆரோன் பின்ச், இந்த வாய்ப்பை கொடுத்தால் பயன்படுத்தி கொள்வேன் என கூறியுள்ளார்.
“உண்மையை சொன்னால் நான் அதை பற்றி யோசித்ததில்லை, ஆனால் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக கேப்டன் பதவியை எடுத்து கொள்வேன்,” என பின்ச் தெரிவித்தார்.
“இது கண்டிப்பாக கடினமான நேரம் மற்றும் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரின் போது அனைத்தும் மாறிவிடும். வாய்ப்பு கிடைத்தால் எடுத்துக்கொள்வேன், ஆனால் உண்மையாகவே நான் அதை பற்றி எண்ணியதில்லை,” என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பாஷ் தொடரில் இரண்டாவது சீசனில் இருந்து மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். மேலும், ஒருநாள் மற்றும் முதல் தர போட்டிகளில் விக்டோரியா அணியின் கேப்டனாகவும் இருந்திருக்கிறார்.
அடுத்த வருட உலககோப்பைக்கு ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் விளையாடுவார்கள். ஆனால், இங்கிலாந்து அணிக்கு எதிராக ஐந்து ஒருநாள், 1 டி20 யும், ஜிம்பாப்வே அணிக்கு எதிராக டி20 தொடர்களிலும் அவர்கள் பங்கேற்க மாட்டார்கள்.