ஆஸ்திரேலிய கேப்டனை கிண்டல் செய்த இங்கிலாந்து இளவரசர்! 1

உலகக்கோப்பையில் பங்கேற்கும் 10 நாடுகளின் கிரிக்கெட் கேப்டன்கள், இங்கிலாந்து ராணி எலிசபெத்தை சந்தித்து உரையாடியபோது, இளவரசர் ஹாரி ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்சை கிண்டல் செய்த விஷயம் இப்போது கசிந்துள்ளது.

உலகக்கோப்பையில் பங்கேற்கும் 10 நாடுகளின் கிரிக்கெட் கேப்டன்கள், இங்கிலாந்து ராணி எலிசபெத்தை சந்தித்து உரையாடியபோது, இளவரசர் ஹாரி ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்சை கிண்டல் செய்த விஷயம் இப்போது கசிந்துள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியையொட்டி 10 அணிகளின் கேப்டன்களும் நேற்று முன்தினம் லண்டனில் இங்கிலாந்து ராணி எலிசபெத்தை சந்தித்து சிறிது நேரம் உரையாடினர். அப்போது உடன் இருந்த இளவரசர் ஹாரி, ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்சை கிண்டல் செய்த விஷயம் இப்போது கசிந்துள்ளது.ஆஸ்திரேலிய கேப்டனை கிண்டல் செய்த இங்கிலாந்து இளவரசர்! 2

பிஞ்ச்சை நோக்கி ஹாரி, ‘உங்களுக்கு கொஞ்சம் வயதாகி விட்டது போல் தெரிகிறதே? இன்னுமா அணியில் இருக்கிறீர்கள்? எவ்வளவு காலம் தான் விளையாடிக்கொண்டு இருப்பீர்கள்’ என்று கேட்டார். அதற்கு 32 வயதான ஆரோன் பிஞ்ச் சிரித்தபடி,‘ 8 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிக்கொண்டிருக்கிறேன்’ என்று மட்டும் பதில் அளித்தார்.

இந்த உலக கோப்பையை வெல்ல வாய்ப்பு யாருக்கு? என்று ஹாரி திரும்ப திரும்ப கேட்டபோது பிஞ்ச் எரிச்சலுடன், ‘இங்கிலாந்து, இந்தியா’ என்று கூறியபடி சென்றார். இளவரசர் ஹாரி இலங்கை கேப்டன் கருணாரத்னேவிடம், ‘உற்சாகமாக இருங்கள். போட்டியை அனுபவித்து விளையாடுங்கள். இல்லாவிட்டால் இங்கு ஆடியே பிரயோஜனம் இல்லை’ என்றார்.

இதற்கிடையே இந்திய கேப்டன் விராட் கோலி, இங்கிலாந்து ராணி எலிசபெத்தை சந்தித்து பேசியதை மையமாக வைத்து பல ரசிகர்கள் தங்களது டுவிட்டர் பதிவில், ‘ராணியிடம் உள்ள கோகினூர் வைரத்தை இந்தியாவுக்கு மீட்டு வாருங்கள் கோலி’ என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்.ஆஸ்திரேலிய கேப்டனை கிண்டல் செய்த இங்கிலாந்து இளவரசர்! 3

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் இன்று தொடங்குகிறது. ஜூலை 14-ம் தேதி வரை 11 இடங்களில் இந்த போட்டி நடைபெறுகிறது.

இதில் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன. இதற்காக அனைத்து அணியினரும் கடந்த வாரம் இங்கிலாந்து சென்று பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்றனர். உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் போட்டி இன்று தொடங்குகிறது.

இந்நிலையில், இங்கிலாந்து நாட்டின் ராணி எலிசபெத்துடன் 10 நாட்டு கிரிக்கெட் அணிகளின் கேப்டன்கள் சந்தித்தனர். அவர்கள் ராணியுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *