உலககோப்பை போட்டியில் இந்திய வீர்ரகள் செய்த மோசமான காரியம்! மூக்கால் அழுது பேசும் அதுல் ரசாக் 1

இங்கிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில், இந்திய அணி வேண்டுமென்றே தோல்வி அடைந்ததாக பாகிஸ்தானின் முன்னாள் ஆல்ரவுண்டர் அப்துல் ரசாக் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து தொலைக்காட்சி ஒன்றிற்குப் பேட்டி அளித்த அவர், “நாங்கள் விளையாட்டை பார்த்துக்கொண்டிருந்தோம், எங்கள் அனைவருக்கும் அதே உணர்வு தான் ஏற்பட்டது. ஒரு நல்ல பந்து வீச்சாளர் அவரது நிலைப்பாட்டில் பந்து வீசவில்லை. ரன்களை அதிகம் கொடுக்கிறார்” என தெரிவித்தார்.

உலககோப்பை போட்டியில் இந்திய வீர்ரகள் செய்த மோசமான காரியம்! மூக்கால் அழுது பேசும் அதுல் ரசாக் 2

மேலும் “எங்களுக்கு சந்தேகமே இல்லை. பாகிஸ்தான் அணியை அரையிறுதிக்கு முன்னேற விடாமல் செய்யவே, இங்கிலாந்துடன் இந்தியா வேண்டுமென்றே தோற்றது எனவும் இதற்காக இந்திய அணிக்கு ஐசிசி அபராதம் விதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

 

இதைத்தொடர்ந்து, அரையிறுதியில் பாகிஸ்தான் விளையாடுவதை இந்தியா விரும்பவில்லை என சில மேற்கிந்திய தீவுகளின் வீரர்கள் தன்னிடம் கூறியதாக முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முஷ்டாக் அஹ்மது தெரிவித்துள்ளார்.

உலககோப்பை போட்டியில் இந்திய வீர்ரகள் செய்த மோசமான காரியம்! மூக்கால் அழுது பேசும் அதுல் ரசாக் 3

இந்த போட்டி குறித்து இங்கிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் சமீபத்தில் வெளியிட்ட தனது புத்தகத்தில் குறிப்பிட்டு இருந்தார். அதில் ‘இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் அணுகுமுறை ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருந்தது. ரோகித் சர்மா, விராட்கோலி ஆட்டம் மர்மமாக இருந்தது.

விக்கெட்டுகள் கைவசம் இருந்தும் டோனி அதிரடியாக அடித்து ஆடாமல் ஒன்றிரண்டு ரன்கள் எடுப்பதில் ஆர்வம் காட்டியது ஏன்? என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை’ என்று தெரிவித்து இருந்தார்.உலககோப்பை போட்டியில் இந்திய வீர்ரகள் செய்த மோசமான காரியம்! மூக்கால் அழுது பேசும் அதுல் ரசாக் 4

இதை சுட்டிகாட்டி பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சிக்கந்தர் பக்த் தனது டுவிட்டர் பதிவில், ‘நாங்கள் கணித்த படி கடந்த உலக கோப்பை போட்டியில் இருந்து பாகிஸ்தான் அணியை வெளியேற்ற இந்திய அணி வேண்டுமென்றே இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தோற்றுள்ளது என்பதை பென் ஸ்டோக்ஸ் தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த குற்றச்சாட்டுக்கு பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக டுவிட்டர் மூலம் சிக்கந்தர் பக்த்க்கு பதிலடி கொடுத்துள்ளார். அந்த பதிவில், ‘எனது புத்தகத்தில் நீங்கள் கூறிய வார்த்தையை கண்டுபிடிக்க முடியாது. ஏனெனில் அப்படி நான் ஒருபோதும் சொன்னதில்லை. இதைத்தான் வார்த்தையின் அர்த்தத்தை திரித்து சொல்வது என்பார்கள்’ என்று அவர் கூறியுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *