பாண்டியாவின் ஆட்டம் அற்புதமானது: சுனில் கவாஸ்கர் 1

தடைக்கு பின்னர் மீண்டும் வந்து ஆடிய ஹர்திக் பாண்டியாவின் ஆட்டம் அற்புதமானது என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் புகழ்ந்துள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டியில் கேன் வில்லியம்சன் அடித்த பந்தை, ஹர்திக் பாண்டியா ‘சூப்பர்மேன்’ போல் பறந்து கேட்ச் பிடித்தார்.

இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

பாண்டியாவின் ஆட்டம் அற்புதமானது: சுனில் கவாஸ்கர் 2

இரு அணிகள் இடையிலான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 49 ஓவர்களில் 243 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக, ராஸ் டெய்லர் 93 ரன்கள் எடுத்தும், லாதம் 51 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர்.

பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி சர்ச்சையில் சிக்கிய ஹர்திக் பாண்டியா, இந்த போட்டியில் இடம்பெற்றார். போட்டியின் 17-வது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் சாஹல் வீசி, எதிரணி கேப்டன் கேன் வில்லியம்சன் எதிர்கொண்டார். அப்போது, 2 விக்கெட்டுகள் இழப்புக்கு நியூசிலாந்து அணி 59 ரன்கள் எடுத்திருந்தது.

அந்த ஓவரின் 2-வது பந்தை, கேன் வில்லியம்சன் மிட் விக்கெட் பகுதியில் தூக்கிய அடித்தார். அப்போது அங்கு பீல்டிங் செய்த ஹர்திக் பாண்டியா ‘சூப்பர்மேன்’ போல் பறந்து சென்று கேட்ச் பிடித்து முக்கியமான விக்கெட்டை வெளியேற்றினார்.

ஹர்திக் பாண்டியாவின் அட்டகாசமான பீல்டிங்கை ட்விட்டரில் கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.நியூசிலாந்து அணிக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டியில் ஹர்திக் பாண்டியா பந்துவீசியபோது, ஷிகர் தவான் கடுப்பேற்றிய வீடியோ வைரலாகி வருகிறது.பாண்டியாவின் ஆட்டம் அற்புதமானது: சுனில் கவாஸ்கர் 3

போட்டியின் 14-வது ஓவரை அவர் வீச, நியூசிலாந்து அணியின் ராஸ் டெய்லர் எதிர்கொண்டார்.

அந்த ஓவரின் 2-வது பந்தை ஹர்திக் பாண்டியா ஷார்ட் டெலிவெரியாக வீச, அதை டெய்லர் மிட் விக்கெட் திசையில் தூக்கி அடித்தார். பந்தை வேகமாக வந்து எடுத்த ஷிகர் தவான், ஸ்டம்புக்கு எறியாமல் தூரமாக வீசினார். இதனால், கூடுதலாக ஒரு ஓவர்த்ரோ ரன் போனது. இதனால், ஹர்திக் பாண்டியா எரிச்சல் அடைந்தார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *