அவர் எடுத்தது ஹாட்-ட்ரிக் கிடையாது: புதிய குண்டை தூக்கிப்போடும் ஆடம் கில்கிரிஸ்ட் 1

2001ம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த டெஸ்ட் போட்டியில் பாலோ ஆன் ஆடிய இந்திய அணி பிறகு டெஸ்ட்டையே வென்று வரலாறு படைத்தபோது ஹர்பஜன் எடுத்த ஹாட்ரிக் மீது ஆடம் கில்கிறிஸ்ட் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

அதாவது ஹர்பஜன் சிங் அப்போது ரிக்கி பாண்டிங், ஆடம் கில்கிறிஸ்ட் இருவரையும் எல்.பி.யில் வீழ்த்தி பிறகு அடுத்த பந்தே ஷேன் வார்னை, ரமேஷ் கேட்சுக்கு வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை புரிந்தார்.

தற்போது பும்ரா 3வது இந்திய பவுலராக டெஸ்ட் ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்திய போது பலரும் சமூகவலைத்தளங்களில் ஹர்பஜன் சிங்கின் அந்த புகழ்பெற்ற ஹாட்ரிக்கை வீடியோவாக வெளியிட்டு மகிழ்ந்து வருகின்றனர்.அவர் எடுத்தது ஹாட்-ட்ரிக் கிடையாது: புதிய குண்டை தூக்கிப்போடும் ஆடம் கில்கிரிஸ்ட் 2

அதில் ஒரு வீடியோவை பகிர்ந்த ஆடம் கில்கிறிஸ்ட், ‘நோ டீ.ஆர்.எஸ்’ என்று கூறி அந்த ஹாட்ரிக் மீது ஐயம் எழுப்பியுள்ளார்.

3வது நடுவர் இருந்து ரிவியூ கேட்டிருந்தால், ஆடம் கில்கிறிஸ்ட் அவுட்டை நடுவர் நாட் அவுட் என்று கூறியிருப்பார் என்பதே கில்கிறிஸ்ட் கருத்து, பந்து லெக் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆனது, அங்கேயே அது நாட் அவுட் அதன் பிறகுதான் பந்து செல்லும் தடம் பற்றிய ரீப்ளேயெல்லாம்.

ஆம் கில்கிறிஸ்ட் கூறுவது உண்மை போல்தான் அந்தப் பந்தைப் பார்த்தால் தெரிகிறது. பந்து மட்டையில் பட்டது போலும் தெரிந்தது, மேலும் லெக் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆன பந்து என்றும், அடுத்ததாக ஷேன் வார்னுக்கு ரமேஷ் பிடித்த (?!) கேட்ச் தரையில் பட்டுச் சென்றது என்றும் அது ஹாட்ரிக்கேயல்ல உண்மையில் ஒரே விக்கெட் ஹாட்ரிக் என்று சமூகவலைத்தளங்களில் பலரும் கிண்டலடித்து வருகின்றனர்அவர் எடுத்தது ஹாட்-ட்ரிக் கிடையாது: புதிய குண்டை தூக்கிப்போடும் ஆடம் கில்கிரிஸ்ட் 3

சிட்னி டெஸ்ட் போட்டியில் அனில் கும்ப்ளே தலைமையில் 2008-ம் ஆண்டு தொடரில் நடுநிலை நடுவர்களே இந்திய அணிக்கு எதிராக மோசடியாகச் செய்ததைப் பற்றி கில்கிறிஸ்ட்டுக்கு யாராவது நினைவுபடுத்த வேண்டியுள்ளது.அவர் எடுத்தது ஹாட்-ட்ரிக் கிடையாது: புதிய குண்டை தூக்கிப்போடும் ஆடம் கில்கிரிஸ்ட் 4

இந்தப் போட்டி மட்டுமா? பாகிஸ்தானுக்கு எதிராக ஒருமுறை 300 ரன்களுக்கும் மேலான இலக்கை எதிர்த்து ஆடிய போது வக்கார் யூனிச், சக்லைன் முஷ்டாக் பந்தில் இவரும் அவுட், ஜஸ்டின் லாங்கரும் அவுட் நடுவர் நாட் அவுட் என்பார், ஆஸ்திரேலியா வெற்றி பெறும் அதெல்லாம் கூட டி.ஆர்.எஸ். இருந்திருந்தால்…. என்று கேட்டுக் கொள்வாரா கில்கிறிஸ்ட்? என்பதே ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது.

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *